பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கிடக்கின்றான். அவனுடைய முகங்கள் பொலிவு பெற்று விளங்குகின்றனவாம். அதினும் இறந்துபோன ஒருவனுடைய முகங்கள் மும்மடங்கு பொலிந்து விளங்குகின்றன என்று புலவன் கூறுகிறான். இஃது இயலுமா? இறந்தவன் முகங்கள் பொலிவுற்றன என்று கூறுதலோடு, மும்மடங்கு பொலிவுற்றன என்று புலவன் கூறுகிறான். ஒரு சிறிது நின்று ஆராய வேண்டிய இடம் இது. அவனுடைய கருத்தை முழுவதும் வாங்கிக்கொண்டால் ஒழியப் பாடலில் ஒன்ற முடியாது. எனவே, பாடலைப் பார்ப்போம். பாடல் முழுதும் கவிஞன் கூற்று. வெம்மடங்கல் வெகுண்டனைய சினமடங்க, மனமடங்க, வினையம் வியத் தெவ்மடங்கப் பொருதடக்கைச் செயலடங்க, மயலடங்க, ஆற்றல் தேயத் தம்மடங்கு முனிவரையும் தலையடங்கா நிலையடங்கச் சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா! (கம்பன் - 9902) பாடலின் பொருள் எளிதாகவே உள்ளது. இனி இவ்வாறு பாடலினிடத்துப் புலவன் அமைத்த ஓவியத்தைக் காண்போம். - வீழ்ந்து கிடப்பவன் சாதாரணமானவன் அல்லன்; "முக்கோடி வாணாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள், எக்கோடி யாராலும் வெல்லப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகனைத்தும் செருக் கடந்த புயவலியும்' (9899) உடையவன் அல்லனா?