கலைஞன் வீழ்ச்சி 219 இப்பொழுது அவற்ற்ையெல்லாம் இழந்து கிடக்கிறான். கனவினும் நினைத்தற்கரிய ஒரு செயல் நிகழ்ந்திருக்கிறது. கேட்டாரெல்லாரும் முதலில் உறுதியுடன் நம்ப முடியாமல் திகைக்கின்றனர். இறந்ததில் வருத்தம் கொள்ளாதிரார். ஆகவே, அவர்கள் மனத்தில் தோன்றும் அவலத்தையெல்லாம் ஆசிரியன் வெளியிட்டுத் தீரல் வேண்டும். அவலத்தை வெளியிடப் பல வழிகள் உண்டு. இங்கே கலைஞன் கையாள்வது ஒருமுறை. அடங்க' என்ற ஒவ்வொரு சொல்லினும் இழத்தல் தன்மை பல்குகிறது. முதல் அடங்க என்ற சொல்லிற்கும் இரண்டாவது 'அடங்க' என்ற சொல்லிற்கும் இடையே அவலச்சுவை பெருகுகிறது. இம்மட்டோ! ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு கருத்தைத் தொடர்ந்து வருதலைக் காணலாம். யாரேனும் ஒருவன் இறந்த பின்னர் அதனைக் கேள்வி யுற்றார் முதலில் அவனிடத்துள்ள சிறந்த இயல்பு ஒன்றைப்பற்றி நினைத்தல் உலகியற்கை. இறந்தவன் தன்னுடைய் வாழ்வில் பல்வேறு இயல்புகள் உடைய வனாயினும், ஒரு சிறப்பியல்பு அவனுக்கு உரித்தாய் இருந்திருக்கும். அதே போல இராவணனுடைய வாழ்க்கை முழுவதையும் ஆராய்ந்து பார்ப் போமானால், அதில் சிறப்பாகத் தோன்றுவது அவனது சினம். இதனை முன்னர் ஒரு பாடலில் அவன் வாயிலாகவே ஆசிரியன் கூறுகிறான். இந்திரசித்து இறந்தபொழுது தன்னை நொந்து புலம்பும் இராவணன், சினத்தொடுங் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி நினைத்தது முடித்து நின்றேன்! என வருந்துகிறான். இராவணன் என்று
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/236
Appearance