காப்பியம் ல் 7 நாடோ, அப்படியே அவனது இலங்கையும் ஒரு கனவுலகம். அவனுடைய இராவணனும் ஒரு கனவுத் தலைவன். இங்ங்ணம் கூறுவதால் உண்மை கூறாதவன் என்ற குற்றச்சாட்டை அவன்மேல் ஏற்ற வேண்டுவதில்லை. இத்தகைய பெருங் காப்பியத்தைக் கலைஞன் கைக்கொண்டபொழுது அவற்றின் மூலம் சில உண்மைகளை அறிவுறுத்த முன்வருகிறான் என்று நாம் அறிய வேண்டும். அவ்வாறு செய்யவேண்டு மேயானால் அவனது விருப்பம்போல் உண்மைகளை மாற்றவும் கூட்டல் கழித்தல் செய்யவும் அவனுக்கு உரிமை இருத்தல் வேண்டும். ஒரு நிகழ்ச்சி எவ்வளவு உண்மையாக நடந்து சரித்திர பூர்வமானதாக இருப்பினும் அதை அவ்வாறே கூறினால் அது பாட புத்தகம் போன்றதும், சுவையற்றதுமான சரித்திர மாகுமே தவிரக் கவிதை நிறைந்த, கற்பனை மிகுந்த காப்பியமாக ஆகாது. நாம் அதனை இத்துணை விருப்பத்துடன் கற்கவும் மாட்டோம். எனவே, அவனது கற்பனைக்கு இடந்தர வேண்டுமானால் அங்குச் சரித்திரபூர்வமான மெய்மையைத் தேடிக் கொண்டிருத்தல் தவறானதாகும். இத்தகைய இலக்கியப் படைப்பை ஆக்கும் கலைஞன் சில நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு, தன் கற்பனை யால் ஒரு முழுவடிவம் பெற்ற கலைக்கோயிலைச் சிருட்டிக்கிறான். அவன் ஆதாரமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் அவன் காலத்திலேயே நடை பெற்றவை யாயும் இருக்கலாம்; இன்றேல், பன்னெடுங் காலமாக வழங்கப்பட்டுவரும் கர்ணபரம்பரைக் கதைகளாகவும் இருக்கலாம்; அத்தகைய கதைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய காப்பியத்தில் இராமாயணம் போன்றதில் சரித ஆராய்ச்சிக்கு இடமே இல்லை.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/26
Appearance