அவலம் 15 தோன்றுவது இன்பம் என்ற ஒன்றுதான். ஆனால், பிணிப்பிற்குக் காரணமான இதே அன்பு போருக்குக் காரணமாக இருக்குமேயானால் அங்கே அவலம் பிறக்கிறது. அன்பு கூடப் போருக்குக் காரணமா இருத்தல் கூடுமோ என்றால், ஆம் என்றே விடை தருதல் வேண்டும். இதனை நன்குணர்ந்த வள்ளுவப் பெருந்தகையார் - அறத்திற்கே அன்பு சார்(பு) என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துணை (குறள் 76) என்று கூறிப்போந்தார். ஆனால், இக்குறளுக்குப் பரிமேலழகர் வேறு பொருள் கூறிச்செல்கிறார். அஃதொருபுறம் நிற்க, மறம் நிகழ்வதற்கும் அன்பு காரணமாயுள்ளது என்ற கருத்தே நமக்குப் போதுமானது. எனவே, அன்பே முரண்பாட்டிற்குக் காரணமாகலாம் என்று அறிகிறோம். உதாரணத்தால் இதனை நன்கு விளங்கிக் கொள்ளலாம். சீதையின்மாட்டு அன்பு பூண்டார் இருவர். ஒருவன் இராமன், மற்றையவன் இராவணன், இராவணன் கொண்ட அன்பு சரியானதா என்ற கேள்வியைச் சற்று மறந்துவிடவேண்டும். அவ்வன்பு தவறாகையால் நேர்ந்த பயன் ஒருபுறம் இருக்கிறது. நிற்க, அவன் கொண்ட அன்பிற்கும், இராமன் கொண்ட அன்பிற்கும் ஏற்பட்ட முரண்பாடே, ஒரு பெரிய அவலமாக நமக்குக் காட்சியளிக்கிறது. அன்பு என்பது சிறந்த குணங்களுளெல்லாம் உயர்ந்தது. அவ்வன்பே இரண்டாகப் பிரிந்து தம்முள் முரண்பட்டுப் போர் இடுமானால் அப் போர் அஞ்சத் தக்கதாக இருக்கும். எல்லாரும் விரும்பி மேற்கொள்ளும் 'அன்பு என்ற இ.மா.வி.-3
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/34
Appearance