20 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அடக்கி, ஆட்சி செய்து, மேல் எழும்ப முயலும் பொழுது, இயற்கை தனது திறத்தால் அவற்றை அடக்கிச் சமநிலைப்படுத்துகிறது. அங்ங்னம் இயற்கை அடக்கும்பொழுது அழிவு நேரிடலாம். அந்த அழிவு அவலமாக நமக்குக் காட்சியளிக்கிறது. பல சமயங் களில் அழிக்கப்படும் பொருள் நன்மையாகவே இருக்கலாம். இங்ங்னம் அழிக்கப்படும் பொருள் நன்மையாக இருந்தால் மட்டும் அங்கே அவலம் தோன்றும் என்று ஹேகல் போன்ற பெரியோர் கருதினர். ஆனால், தீமையே அழிக்கப்படினும் அதிலும் நாம் வருத்தத்தையே அடைகிறோம். மேலும், அத்தீமை மிகப் பெரியதாயிருக்குமாயின் நமது மதிப்பு இன்னும் உயருகிறது. எனவே, ஹேகலின் கருத்துத் தற்காலத்தவரால் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு பண்பும், தான் தன் நிலைபேற்றுக்குப் போராடினால் தவறில்லை. அவலத் தலைவரின் வாழ்க்கையில் இவ்விதம் நடைபெறுவதில்லை. ஏதோ ஒரு பண்பு மிகும்பொழுது, மற்றப் பண்புகள் வாழ அம் மிகும் பண்பு இடந் தருவதில்லை; தானே ஆட்சி செய்ய முற்படுகிறது. இதனாலேயே அவர் ஏனையோரினும் மேம்பட்டவராகக் கருதப்பெறு கின்றனர். எவ்வாறாயினும், மற்றவற்றின் உரிமையில் ஒரு பண்பு தலையிடும் பொழுதே போராட்டம் மிகுந்துவிடுகிறது. அதனாலேயே முழு உரிமை ஒன்றிற்கும் இல்லை என்று நிலைநாட்டப் போரின் இறுதியில் முழு வெற்றி ஒன்றுக்கும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. போரிடும் பண்புகள் இரண்டுமே போரில் நட்டமடைகின்றன. இறுதியில், வெற்றி பெறும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/39
Appearance