பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் சூரபதுமன் அவலத்திற்கு அடிப்படை அறிவும் அறியாமையும்; கோவலன் அவலத்திற்கு அடிப்படை மானமும் காதலும் ஆகும். இராவணன் காமத்தைப் பெரிதாகவும், சூரபதுமன் அஞ்ஞானமாகிய ஆணவத்தைப் பெரிதாகவும் கோவலன் மானத்தைப் பெரிதாகவும் நினைத்தமையாலேயே தம் உயிரும் இழந்தனர். இராவணன் இறுதி நிலையில் தன் பகைவன் யார் என்று அறிந்து கொள்கிறான். அந்நிலையில் சீதைபாற் கொண்ட ஆசை நீங்கிற்றேனும் இது வரை தலைகாட்டாதிருந்த மானம் இப்பொழுது வெளிவருகிறது. அதுவும் தன் நிலையில் இருந்திருக்குமே ஆயின் அவனது ஆவி பிரிந்திருக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. இதுவரை ஆசைக்காகப் போரிட்ட இராவணன் இப்பொழுது மானத்திற்காகப் போராடுகிறான். தனியாண்மை நிறுத்தி ஆவி முடிப்பன்' என்று கருதுகிறான். சூரபதுமனும், இறுதியாகத் தான் போரிடும் பேறு பெற்றது குழந்தையோடன்று என்றும், அவனே எல்லாம் வல்ல முழுமுதற் பொருளென்றும், மெய்யுணர்வு பெறுகிறான். உடனே, தலையால் வணங்க வேண்டும்; நாவால் துதிக்க வேண்டும், கால்களால் வலம் வரவேண்டும் என்று நினைக்கிறான், ஆனால், இந்நினைவை அடுத்து மற்றோர் நினைவு தோன்றுகிறது. அதுவே அவனது இறப்பிற்குத் காரணமாகிறது. 'தடுத்தது மானம் ஒன்றே என்று அவனே கூறிவிடுகிறான். அஞ்ஞானம் என்று கூறப்படும் அறியாமை நீங்கினும் அவ்விடத்தைப் பற்றிக் கொண்டு எல்லையற்ற மானம் ஆட்சி செய்ய