பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தன் வாழ்க்கையைச் செலுத்த ஒருவன் முனைந்து அதில் தோல்வி எய்தின் அதனை இவ்வகை அவலத் தில் சேர்க்கலாம். ஆனால், அங்ஙனம் வாழ்ந்து தோல்வி எய்து, அதனால் அழிந்து போயினும் அத்தகையோர் வாழ்வை அவலம் எனத் தமிழர் கொண்டிலர். பெரிய புராணத்தில் கூறப்படும் சில நாயன்மார் வரலாறுகள் இவ்வகுப்பைச் சேர்ந்தவை. இவ்வவலத்தின் அடிப்படை, தன்னையும் தன் செயலையும் அடிப்படையாகக் கொண்டதன்று. இஃது ஒரு சிறந்த அவலமே. இறுதியில் ஏற்படும் இழவில் நாம் அவலத் தலைவன் பெற்ற தண்டனை தகுதியானது என்று நினைப்பதற்கும் அஞ்சுகிறோம். தண்டனை தந்த பொருள்மாட்டுக் கொண்ட மதிப்பால் வேறு வழியில்லை என்றே நினைக்கிறோம். ஆனால், ஹேகல் முதலியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்ட இதனிலும் வேறுபட்ட அவலம் ஒன்றுண்டு. இந்த அவலத்தில் அடிப்படைப் பொருள் இரண்டும், தனி மனிதனையும் அவனுடைய பண்புச் செயல்களையும் பொறுத்தவையே. உலகத்திற்காகவோ, தனது சமுதாயத்திற்காகவோ செய்யப்படுஞ் செயல் ஒன்றும் ஈண்டில்லை, கதையின் போக்கில், அவலத் தலைவனது எண்ணம், செயல்களின் அடிப்படைக் காரணத்தை நாம் காண முடிகிறது. இராவணனுடைய எண்ணத்திலும் செயலிலும், அரக்கர் சமுதாயத்தைப் பற்றிய கவலை ஒன்றும் இல்லை. ஏன்? அருமைத் தம்பியும் தனையனும் கூட அவனுடைய மனம் கருத்து முடிவுபெற உதவும் துரண்களாகப் பயன்படுகிறார்களே தவிர வேறில்லை. தனிப்பட்ட அவனுடைய ஆசை முடிவு பெற இத்துணைச் செயல்களும் நிகழ்கின்றன. இவ்வாசை முறையானதா என்ற கேள்விக்கு நாம்