26 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இரக்கத்தையுமே அடைகிறோம்; கவிஞனும் அவ்வாறே அடைகிறான். இவனோ இந்நிலை யடைந்தான்? என்றே வருந்துகிறோம். ஆனாலும் அவலத் தலைவன் இறுதியில் ஒருவிதமான ஆறுதலடைய வேண்டுமென்றே விரும்புகிறோம். இவ்வாறுதல் எத்தகையதாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய எண்ணம் நம் மனத்தில் உண்டாகக் காரணம், நாம் அவலத் தலைவனின் முழுத் தன்மையிலும் ஈடுபட்டிருந்தமையே யாகும். அங்ங்ணம் அல்லாமல் அவனுடைய தீமையை மட்டும் நினைந்திருப்போமாகில் எவ்விதமாகவேனும் அவன் அமைதி பெற வேண்டுமென்றே விரும்புகிறோம். அவ்வமைதி எவ்விதமாகவேனும் இருக்கலாம். இவ்வுலகைவிட மேலுலகம் சிறந்ததாகலின் அதனை விரும்பி உயிரைவிடும் தலைவர்களும் உளர்; அல்லது தமது வீழ்ச்சியில் அமைதியைக் காணுகிறவர்களும் உளர். இறுதியாகத் தம்மை நசுக்கிக் கொல்லும் துன்பங் களிடையே நின்றும் இறுதிவரைத் தமது கருத்தை விட்டுக்கொடாது நின்று உயிரைவிடும் அவலத் தலைவர்களும் உண்டு. தான்கொண்ட கொள்கையை இறுதிவரை விடாது பற்றி நிற்கும் வீரம், தனக்கு அழிவு வந்த விடத்தும், அதனை ஏற்றுக்கொண்டு அக் கொள்கையை நிலைநாட்டும் அவ்வீரம் போற்றற் குரியது. இங்ங்னம் கொள்கைக்காக உயிரை விடுதலினாலேயே இவர்கள் வீரர்கள் என்றும், அவலத் தலைவர்கள் என்றும் போற்றப் பெறுகின்றனர். அவலஞ் சிறக்கின்ற கதைகளுள் காட்டப்படும் நிகழ்ச்சிகள் பலவகைப்படும் அவலத்தை மிகுதிப்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/45
Appearance