28 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அனுபவிக்கும் பயன் எச் செயலால் நிகழ்ந்தது என்று ஆராய்ந்து பயனில்லை. இக் கருத்தை அடிப்படை யாகக் கொண்டே அவலம் நடைபெறுகிறது. கல்வி கேள்விகளிற் சிறந்த தலைவன் ஒரு பெருந்தவற்றைச் செய்கிறான். அவனே தவறு என்று அறியக் கூடிய அதனைப் பிறர் எடுத்துக்காட்டிய பொழுதும் திருந்து கிறானில்லை. காரணம் என்ன? தனக்கு அழிவைத் தானே தேடிக்கொள்ள யாரேனும் முன் வருவார்களா? அழிவு உறுதி என்று அறிந்திருந்தும் ஏன் இத்தலைவன் இங்ங்னம் செய்கிறான். விடை கூற முடியாதவிடத்து விதி என்று கூறுகிறோம். மாட்சி யுடைய அவலத் தலைவன் வீழ்ச்சியடையும் பொழுது நாம் வியக்கிறோம். இத்தகைய மாட்சியுடைய ஒருவன் தான் செய்த தவற்றை அறிந்துகொள்ளாமலும், அறிந்த பின்னர் அதனைப் போக்கிக் கொள்ளாமலும் இவ்வாறு வீழ்ச்சியடையலாமா என வருந்துகிறோம். இத்தகைய வீழ்ச்சியை அடைந்தவன் நன்மையும் தீமையும் முரண்பட்டதால் வீழ்ந்திருந்தால் ஒருவேளை மன அமைதியடையலாம். ஆனால், நன்மையும் நன்மையும் முரண்பட அதன் பயனாக வீழ்ச்சியும் அவலமும் ஏற்பட்டிருந்தால் நாம் வியப்பும் திகைப்பும் அடைகிறோம். ஏன் ஒரு நன்மை வீழ்ச்சியடைய வேண்டும், ஒன்று வெற்றி பெற வேண்டும் என்று நம்மையும் அறியாமல் கேட்கிறோம். இவ்வினாவிற்கு விடை கிடைத்தல் இயலாத காரியம் என்று அறிகிறோம். இந்நிலையில்தான், ஆசிரியன் விதி என்ற ஒன்றை முன் நிறுத்துகிறான். விதியின் பயனாலேயே ஒரு நன்மை அழிகிறது; மற்றொன்று வெற்றி பெறுகிறது. அழியும் நன்மை, வலிய விதியால் அழிக்கப்படுகிறது. அதற்குரிய காரணம் நம் அறிவால்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/47
Appearance