இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
46 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் நீக்கி, நூலில் காணப்படும் அனைவரையும் படைத்து, காத்து, அழிக்கின்றவன் கவிஞனே என்பதைத் திண்ணமாக மனத்துட்கொண்டு கவிதைகளை அனுபவிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் இன்பமடையமுடியும். மேலும், கவிஞன் கருத்து எது என்பதையும் அறியமுடியும். இம்முறையில் நோக்கின் கம்பன் இராவணனை ஒர் அவலத் தலைவனாகவே கருதித் தனது காப்பியத்தை இயற்றினான் என்பது விளங்கும். அம்முறையிலேயே இந் நூலும் எழுதப்படுகிறது.