'தீயினை நயந்தான் 69 மனிதனும் அதனை மதியான். ஆகவே, ‘மானம் இழந்து நீ வாழ விரும்புகிறாயா?" என்ற முறையிற் கேட்கிறான். மானம் இப்பொழுது இழக்க என்ன நேர்ந்து விட்டது? என்ற கேள்வியைத் தமையன் கேளாமலே அவன் விடை தந்து விடுகிறான். "பேசுவது மானம், இடை பேணுவது காமம்" என்று அவன் கூறுமுகத்தான் இவை இரண்டும் ஒன்றோடொன்று விரோதமானவை என்றும், ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்று இராதென்றும் அறிவிக்கிறான். 'ஆசை வெட்கம் அறியாது.” என்ற பழமொழிப் பொருளே மேற்பாடலின் பொருளாகும். இந்நிலையிலும், இராவணன் தன் மனம் மாறிய தாகத் தெரியவில்லை. உடனே தனது போக்கை மாற்றிக்கொண்ட கும்பகருணன், போர் செய்தலே தக்கது, என்று முடிவு கூறிவிட்டான். மட்டவிழ் மலர்க்குழலி னாளைஇனி மன்னா ! விட்டிடுது மேல்எளிய மாதும்; அவர் வெல்லப் பட்டிடுதுமேல் அதுவும் நன்று; பழி அன்றால். (கம்பன் - 6123) எனவே, தமையன் மனம் மாறாதது கண்ட தம்பி கூடுமான வரை, பழி வராமல் தடுக்க முயல்கிறான். இராவணனும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறான். கும்பகருணனது முடிவை ஏற்றுக்கொள்வதால் அவன் முற்கூறிய நியாயங்களனைத்தையும் இராவணன் ஏற்றுக்கொண்டான் என்பது கருத்தன்று. பழியளவிற்கு இராவணன் அஞ்சினான் என்ற கருத்தை யாரும் மறுப்பதற்கில்லை. சீதையின் மாட்டு எவ்வளவு காமம் கொண்டிருந்தானோ, அவ்வளவு காதல் புகழ்மாட்டும் கொண்டிருந்தான் அவன். இறுதியாகத் தனது
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/88
Appearance