72 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அஃது ஒருபுறமிருக்க, தன் வலியையாவது ஆராய்ந்தானா இராவணன்? வெற்றிமேல் வெற்றி பெற்றார் செய்யும் தவற்றையே அன்றோ, இவனும் செய்து விட்டான்! இதுவரைத் தோல்வி என்பதையே காணாமையின் தன் வாழ்நாளில் தோல்வி என்பதே இல்லை என்றன்றோ ஒரு தவறான முடிவுக்கு வந்து விட்டான்! - உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முறிந்தார் பலர். நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும். - . குறள், 473, 476) போர் வீரனுக்கு வேண்டப்படுவனவாகிய இவ்விரு பண்புகளையும் மறந்துவிட்டான். தக்க சமயத்தில் அவனுக்கு இதனை எடுத்துக்காட்ட வேண்டாவா? இதுவே கும்பகருணன் இப்பொழுது செய்கிற செயல்: அண்ணா, உன் வலிமைக்கும் எல்லையுண்டு. அதற்கு மேலும் செல்வாயேயாயின் உயிர்க்கிறுதி ஆகிவிடும்," என்று சொல்வானாய், r கல்லலாம் உலகினை வரம்பு கட்டலாம்; சொல்லலாம்; பெருவலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது, சீதை மேனியைப் புல்லலாம் என்பது போலு மால்-ஐய! - - . கம்பன் - 7352) என்றும், - கெடுத்தனை நின்பெருங் கிளையும், நின்னையும். - - (கம்பன் - 7354)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/91
Appearance