96
இராவண காவியம்
55. மருப்பொடு தூங்குகை வாங்கி யோங்குவான்
பொருட்பென வருகரி பொன் றக் கோட்புலி
பருக்கென மருப்பீடை பாய்தல் கண்டுமே
சுருக்கென மறவர்கள் தோளை நோக்குவர்.
56. சந்தகில் வேங்கையிற் சமைத்த கொத்தினால்
சொந்தம் தருவிநீர் தோய்த்து வீசியே
செந்தமிழ் மழலைவாய் சிரித்துச் சீரிள
மைந்தரும் மகளிரு மகிழ்ந்து செல்வரால்.
57, மாணுறு முருகிய மழையி னார்ப்பாவே
கோணுறு குறிஞ்சியாழ் குழலொ டார்ப்பவே
பாணர்கள் குறிஞ்சிவாய் பா..ப் பாங்கினிற்
காணுறு ரிடமெலாங் கண்டு சென்றனர்.
58, வென்றெறி முரசொலி வெண்சங் இன் னொலி
ஒன்றிய பறையொலி நரம்பி னுள்ளொலி |
மன்றலங் குழலொலி மறவ ரார்ப்பொலி
குன்றொலி யொடுதொகு குமுறி பார்த்தவே
59. ஏடெழுத் தாணியா சியன்ற தாய்க்கொடி
நீடிய வானிடை (கிரிர்ந்து குன் றுறை
வேடுவர்க் குரைத்திட விரைந்து முன்பறந்
தோடுபைங் கிளியின மொத்துத் தோன்றுமால்,
60, இன்னபல் காட்சிகண் டி.னிய செந்தமிழ்
மன்னவர் மன்னனு மற்றை மக்களும் -
பொன்னென வேங்கைவீ பொலியுஞ் சாரல்விட்
டின்னல் மிகுந்தவோ ரிடத்தை மேயினார்.
61. குன்றுறம் யானை யுங் குதிரை யீட்டமும்
வென்றியி னூர்ந்திடு விலங்கின் கூட்டமும்
நின்றுயர் மரங்களி னிரல வாய்க்கொடக்
குன்றமும் பாசறைக் கோலங் கொண்டதே.
65, மருப்பு-கொம்பு, வாங்கி-வளைத்து. பொருப்பு-மலை.
57. கோண-வளைவு.
61. விலங்கு,-சிடாய் முதலியன. ஓரல-வரிசையாக.
பக்கம்:இராவண காவியம்.pdf/122
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
