பக்கம்:இராவண காவியம்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96. கண்மணி போலவன் கருதப் பெற்றவர் பெண்மணி பா.இளம் பிரிந்த தன்மையால் விண்மணி போலொளி விளங்கு மேனிமா சுண்மணி போலொளி யுயங்கி னானரோ. 97. அன்னவன் நிலைமையை யறிந்த தோழர்கள் ஒன்னலர்க் குடைகிலா வுரனு முன்னொடு மன்னிய பெருமையு மடங்கச் சிரிழந் திந்நிலை யுற்றமை யென்கொ லென்றனர்? 98. உற்றவா றுரைக்கவவ் வுரிமை யாளரும் மற்றவள் நிலையினை யறிந்து மன்னனைச் சொற்றது தவறெனத் துணை மை செய்திடப் பெற்றவள் காதலைப் பெருக்கி வந்தனன். 99. மா தமிழ் விளங்குற வருமி ராவணம் தாதவிழ் பூம்பொழிற் கழி தன்னிலங் கோதையின் காட்சியாங் குளிர்ந்த நெய்யினால் கா தலங் கொழுந்துவிட் டெழுந்து காழ்ப்புறம். 4. கைகோட் படலம் 1. சந்தடர் பொழிலிடைத் தமிழர் வாழ்வுற வந்தக மண்ணிலும் வாட்க ணங்கையும் முந்திய காட்சியின் முறைமை கண்டனம்; எந்தைய ரிறைவியி னியல்பு காணுவாம். கடிகமழ் சோலையிற் கண்ட காதலன் வடிவவள் மனத்தொரு வடிவு கொண்டதால் துடியிடை காதலந் துணைவன் றன் னையோர் நொடிபிரி கினும் பொறா நுணிய ளாயினள். 96, விண்மணி - சூரியன். மாசு உண்மணி. மாசு. அழுக்கு. உயங்குதல்-வாடு தல். இவையிரண்டும் ' பாங்கற் கூட்டம்.' ' பெருக்கி வந்தன ன் ' என்பது தோழியிற் கூட்டத்தை. இராவணம-விளக்கு. தாது-பூந்துகள், தகழி- விளக்கின் அ கல். காழ்ப்புறல்-உறு தியாக நின் றெரிதல்.