பக்கம்:இராவண காவியம்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேறு 40. முன்னோர்கள் கையாண்ட மொழிவழக்கும் பொருள்வழக்கு முதிய வாகிப் பின்னாளி லிருப்போர்க்கு விளங்காமற் பொருளையம் பிறக்கு மானால் முன்னூலி னியல்சிறிது மாறாமற் பொருள் விளங்க முறைமை யாக அக்காளுக் கேற்றபடி வழிநூல்செய் தேபோற்ற லமைவ தாகும். 41. அற்றைய நால் களைப்போற்ற லோடமையா தந் நூல்க ளமைவோ டாய்ந்து கற்றவையின் கருத்துணர்வோ டைந்திணையி னியற்கையொடு கலந்த நல்லோர் இற்றையநாட் கேற்றபடி யிலக்கியம் மிலக்கணமு மிசையும் கூத்தும் பொற்றகைய பலப்பலவாப் புது நூல்கள் செய்துமொழி போற்றல் வேண்டும். 42. தாய்மொழியான தமிழ் நிலத்தைப் புலத்தேரா னன்குழுது தகுந்த வித்தாம் ஆய்மொழிகெல் லதைவித்தி யணியென்னு நல்லெருவிட் டமைவ தான பாய்பொருளா நீர்பாய்ச்சிப் பாவென்னும் பயனுதவிப் பரிந்து காக்கும் வாய்மொழிச்செந் தமிழ்ப்புலவர் தமைப்போற்றித் தாய்மொழியை வளர்க்க வேண்டும். 48. தன்னலமென் பதையறியார் பொதுநலநன் கலம்பூண்டு தமிழர்க் கெல்லாம் சொன் னலமும் பொருணலமுஞ் சுவையகருத் தின்னலமுந் தோய்ந்த பாவாம் நன்னலஞ்செய் தேதமது குடிநலத்தோ டுடனலமு காடா தேனைப் பொன்னலமும் புனையாது தமிழ்வளர்க்கும் பெரியாரே புலவ ராவர். 49. அமைவு அது ஆன - தகுதியான, பாய் - பார்த. பரிந்து-அன்போடு. 43. சுவைய - சுவையை யுடைய, சுவை - மெய்ப்பாடு குடி குடும்பம்,