பக்கம்:இராவண காவியம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இராவண காவியம்

மிகப்பழங் காலத்தே தமிழ்காடு இன்றுள்ள எல்லைக்குட்பட்டிருக்கவில்லை; வடக்கில் பனிமலை காறும் பரவியிருந்தது; அயல்நாடர் குடியேற்றத்தால் பின்னர் விந்தமலையை வடக்கெல்லையாகக் கொண்டது. தென் கடல் நிலமாக இருந்தது. அது, இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கில் ஆயிரங் கல்லுக்கு மேல் அகன்றிருந்தது. கிழக்கிலும் வங்கக் கடலும், சாவக முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பா யிருந்தது. தென்னிலத்தில் குமரிமலை; பன்மலை முதலிய மலைகள் ஓங்கியுயர்திருந்தன. குமரிமலையில் குமரியாறும், பன்மலையில் புஃறுளி யாறும் தோன்றி அந்நிலத்தை வளஞ்செய்தன.

குமரியாற்றுக்கும் பஃறுனியாற்றுக்கும் இடைப் பட்ட நிலம் பெருவளநாடு எனவும், பஃறுளிக்கும் தென் கடலுக்கும் இடைப்பட்ட நிலம் தென்பாலிநாடு எனவும், வழங்கின; பஃறுளியாற்றங் கரையில் இவ்விரு நாடுகளின் தலைநகரமான மதுரை இருந்தது. குமரிக்கும் விந்தத்திற்கும் இடைப் பட்டநிலம் திராவிடம் என வழங்கிற்று. இதன் தலைநகரம் வஞ்சி என்பது. கிழக்கு நாட்டி - தலை நகர் நாகை ஆகும். இக்கால்வகைப் பட்ட தமிழகம் - குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்நிலமாகி மக்கட்கு வேண்டிய எல்லாச் செல்வமும் பொருந்தி யிருந்தது.

பழந்தமிழர்கள் அறிவு, ஆற்றல், வணிகம், கைத்தொழில் ஆகிய நாகரிக நற்பண்பில் சிறந்து அதற்கேற்ப அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நாற்பாலாக விளங்கினர், இல்லறமுற்றிப் பொது நலம் புரிவோர் அந்தணராவர், உழவு முதலிய எல்லாத் தொழிலாளரும் வேளாளராவர், நம்முன்னே யோர் நல்லொழுக்கத்திற் சிறந்து ஒன்றா யொருகுலமாயிருந்தனர். தாய்மொழியாம் தமிழ் மொழியை உயிரினும் பெரிதாகப் போற்றி வளர்த்துவந்தனர்.

ஐம் நில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு அவன் ஆணைக்குட்பட்டு வாழ்ந்து வந்தனர். பின்னர்த் தமிழக முழுமைக்கும் ஒரு மாபெரும் தலைவனை ஏற்படுத்தினர். அவன் தமிழகத்தின் நடுவில்- இன்றுள்ள இலங்கை-