பக்கம்:இராவண காவியம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யின் தென்மேற்கில் இருந்த ஒரு தொன்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தனன். அப்பண்டையோன் மரபில் வந்தவரே பாண்டியராவர். அம்மாபெரும் தலைவன் வழிவந்த ஒருவன் தன் மகனைத் தென்னாட்டுக்கும், மற்றிரு தமிழ்த் தலைமக்கள் கிழக்கு நாடு திராவிட நாடுகட்கும் தலைவராக்கினான். அம்மூவர் வழிவந்தோரே பாண்டிய சோழ சோராவர்.

கி. பி. 140 கடைச்சங்க இறுதிக்காலமாகும். அடைச்சங்க முன் 8000 ஆண்டுகளுக்குமுன் தென் கடல் பொங்கிச் தென் பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் வாய்க் கொண்டது; பின், க. மு. 2500-ல் ஒரு முறை பொங்கிப் பெரு வளத்தின் பெரும் பகுதியையும், கிழக்கு நாட்டையும் விழுங்கிற்று; க. மு. 700-ன் முன் ஒருமுறை பெருகித் திராவிடத்தின் ஒரு பகுதியையும் உண்டேப்பமிட்டது.

இரண்டாங் கடல்கோளின் பின்னர் இலங்கை உண்டானது இலங்கை நாட்டின் நடுவில் இருந்த முரீகூடல் மலைமீது இலங்கை நகர் இருந்தது.

மூன்றாங் கடல்கோளுக்கு முன் இலங்கையிலிருந்து தமிழகத்தை யாண்டுவந்த மாபெரும் தலைவர் வழிவந்த வக்சிரவாவுவின் மனைவியான கேகசி என்பாள் இராவணன், கும்பகன்னன், பீடணன் என்னும் மூன்று ஆண்மக்களையும், காமவல்லி என்னும் பெண்மகளையும் பெற்றனள். மூத்தவனான இராவணன் முடிபுனைந்து தமிழகத்தை ஆண்டு வந்தனன்.

மலைவளங்காணச் சென்ற இராவணனும், திராவிடத்தைச் சார்ந்த முதிரையிலிருந்து முல்லை நாட்டை யாண்டுவந்த மாயோன் மகள் வண்டார்குழலியும் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு மணம் புரிந்து இல்லறம் நடத்திவந்தனர். வண்டார்குழலி சேயோன் என்னும் செம்மலைப் பெற்றனள்.

தமிழகத்தின் வடக்கெல்லையான விந்தச்சாரல் பல சிறு நாடுகளாகப் பாகுபட்டிருந்தது. வட நாட்டில் ஆரியர் என்னும் ஓரினத்தினர் வாழ்ந்துவந்தனர். அவர் ஏற்றத்தாழ்வான குல வேற்றுமை யுடையவர். அவர்களில் கல்வி யறிவுள்ள முதியோர் சிலர், இராவணன் தோன்றுவதற்கு நெடுநாள் முன்னரே அறிவுக் கோலத்துடன் தமிழகம் போந்தனர். தமிழ் மக்கள் அன்னாரை அன்புடன் வரவேற்று ஊணுடை யுதவிப் போற்றி வந்தனர். அவர் தமிழ் கற்றும், தமிழரிடம் நெருங்கிப்

2-எ