பக்கம்:இராவண காவியம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


________________

அவ்வில்லை வளைத்தொடித்தனன், சனகன் மகிழ்ந்து, தசரதன் முதலியோரை வரவழைத்துச் சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்குவனுக்கும், தன் தம்பி குசத்துவசன் மகளிரான மாளவியைப் பரதனுக்கும், சுதகீர்த்தியைச் சத்துருக்கனுக்கும் மணஞ்செய்து கொடுத்தனன். தசரதன் சனகனிடம் விடை பெற்று மக்கள் மருமக்களுடன் அயோத்தியை யடைந்தனன்

தசரதன், ராமன் மீதுள்ள பற்றினால் பரதனுக்குரிய நாட்டை ராமனுக்காக்க வெண்ணித் தந்திரமாகப் பாதனைச் சத்துருக்கனுடன் அவன் பாட்டனூருக் கனுப்பிவிட்டு ராமனை நாட்டு மக்களிடம் பழகச் செய்தனர். இவ்வாறு பன்னிரண் டாண்டுகள் சென்றன, தசரதன் அரசர்களையும் குடிகளையும் கலந்து ராமனுக்கு இளவரசுப் பட்டங்கட்ட முடிவு செய்தனன். இதை பறித்த கைகேசியின் தோழியான மந்தரை என்பவள் அரசன் சூழ்ச்சியைக் கூறி முடி சூட்டைத் தடுக்கும்படி வேண்டினாள், கைகேசி தசரதனிடம் முன்னர்ச் சம்பரனை வென்றதற்காகக் கொடுத்த இருவரங்களில் ஒன்றால் பரதன் நாடாளவும், மற்றொன்றால் ராமன் பதினான்காண்டு காடாளவும் செய்யவேண்டும் என கேட்டாள். தசரதன் சூழ்ச்சி பலிக்கவில்லை. ராமன் சீதை லக்குவன் மூவரும் தேரேறிக் காடு சென்றனர்

சென்றவர், குகனென்னும் தோழனால் கங்கையைக் கடந்து வழி நெடுக ஆரிய முனிவர் வரவேற்று வழியனுப்பச் சென்று சித்திரகூட மலையை அடைந்திருந்தனர். தேரோட்டி வந்த சுமந்திரன் சென்று கூறவே தசரதன் ராமன் பிரிவால் உயிர் விட்டனன். பரதன் செய்தி கேட்டு வந்து தந்தையின் உடலை அடக்கம் செய்து சேனை சூழச் சித்திர கூடத்தை யடைந்து ராமனை நாடாள வரும்படி வேண்டினான். ராமன் நாடு பரதனுக் குரிய தென்பதைக் கூறி, பரதன் நான் அதை உனக்குத் தந்தனன். ஏற்றருள்க வென, ராமன் நான் பெற்றோர் சொற்படி பதினான்காண்டு கழித்து வருகிறேன். அது மட்டும் எனக்கீடாக நீ ஆள்வாயெனப் பரதன ராமன் மிதியடியைப் பெற்று மீண்டு, நம்பியூர் என்னும் சிற்றூரில் தங்கி, மிதியடியை முடிபுனைனந் தரியணை யிருத்தி அதை வணங்கி வந்தனன். சத்துருக்கன் ஆட்சி புரிந்து வந்தனன்

சித்திர கூடத்தைவிட்டு ராமன் தமிழகத்தை அடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை