பக்கம்:இராவண காவியம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


யடைத் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவவேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். ராமன் அதற்கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன், பின் அகத்தியன் நிலையை படைந்து அவனால் ஒரு வில்லும், இரு அம்புக்கூடும் தரப்பெற்றுச் சென்று பஞ்சவடி என்னும் இடத்தில் தங்கி யிருந்தனர்.

ராமன் ஒரு நாள் தனித்துலாவிய காம வல்லியைக் சுண்டு காமுற்று, அவள் அறிவுரையைக் கொள்ளாது கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவள் திமிறிக்கொண்டு விரைந்து சென்றனள், ராமன் தன் தம்பியால் அத்தமிழரசியை மூக்கையும் காதையும் முலைக்கண்களையும் அறுத்துக் கொன்று, முன்னேற்பாடில்லாத கரனையும் பொருதழித்தான்.

தூதரால் செய்தி யுணர்ந்த இராவணன் கொதித்தெழுந்து தேரேறி விந்தஞ் சென்று, காமவல்லி வளர்த்த மானை விட்டு ராம லக்குவரைப் பிரித்து அவரை வளைத்துக் கொள்ளும்படி வீரரை வைத்துச் சீதையை எடுத்து வந்தனன். சீதை புலம்பு 'உன் கணவன் வரின் நல்லறிவு புகட்டி அவனுடன் அனுப்புகிறேன் அஞ்சேல்' எனத் தேற்றித் தன் தங்கையின் நிலையில் வைத்துப் போற்றி வந்தனன்.

மறவரல் வளைக்கப்பட்ட ராமலக்குவர் அவரை யோட்டிச் சென்று இலைக் குடிலில் சீதையைக் காணாது வருந்தித் தேரடிப் பாதையைப் பின்பற்றிச் சென்று ஒரு முனிவன் குடிலை யடைந்தனர். அவன், சீதையை இராவணன் இலங்கை கொண்டு செல்வதையும், வாலியால் துரத்தப்பட்டு மதங்கரிடமுள்ள சுக்ரீவன் வரலாறுங் கூறியனுப்பச் சென்று மதங்கரைக் கண்டு நிகழ்ந்தது கூறினர். அங்கே அனுமன் வர மதங்கர் அவர்களை அறிமுகப் படுத்தி அனுமனுடன் அனுப்பச் சென்று சுக்ரீவனைக் கண்டு வரவுகூறி உதவி நாடினர். அவன் என் அண்ணனைக் கொன்று அரசீந்தால் உனது மனைவியை மீட்டுத் தருவேன் என்றான், ராமன் அதற்கிசைந்து வாலியுடன் பொரச் சொல்லி ஒரு மாத்தின் மறைவிலிருந்து அம்பெய்து வாலியைக் சென்று சுக்ரீவனைக் கிட்கிந்தைக் கரசனாக்கி மதங்கர் நிலையை யடைந்திருந்தான்,