பக்கம்:இராவண காவியம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சீதையைப் பார்த்துரைத் தேவியோடு சென்ற இராவணன் ராமன் வாலியைக் கொன்று சுக்ரீவன் படையொடு இலங்கையை முற்ற வரப்போவதாகக் கூறிச் சென்றனன், சீதை,தன்னால் இலங்கை போர்க்கள மாவதை எண்ணிப் புலம்பிக் கொண்டிருக்கையில் பீடணன் மகள் திரிசடை அங்கு வரவே,உன் தந்தையிடம் சொல்லி என்னை எப்படியாவது என் கண்வனிடம் சேர்த்துப் போரில்லாமல் செய்வாயெனச் சீதைவேண்டினாள். திரிசடை அவ்வாறே தந்தையிடம் சென்று கூறி அவன் சரியெனக்கூறி யனுப்பிவிட்டுத் தானும் ராமனை யடைந்து சுக்ரீவன் போல் அரசனாக எண்ணி அதைத் தன் நண்பன் நீலனிடம் கூறி ஆவன செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தனன்.

ராமன் சீதையைப் பார்த்து வரும்படி சுக்கிரீவனது அமைச்சனான அனுமனை அனுப்பினன். அனுமன் இலங்கை சென்று ஓர் ஆரியனால் பீட்ணன் நிலைமை யறிந்து சென்று பீடணன் மனையை யடைந்தான். பீடணன் அனுமனை வரவேற்றுத் தனது எண்ணத்தைக் கூறவே, அனுமன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறித் திரிசடையுடன் சென்று சீதையைத் தனியாக அழைத்து வந்து ராமன் படையொடு வந்து இலங்கையையழித்து உன்னை மீட்டுச் செல்வார் னெனவே சீதை திடுக்கிட்டு இராவணன் பெருமை கூறித் தனியாக வரும்படி கூறுமெனக் கூறித் திரிசடையுடன் சென்றனள்.

அனுமன் வெளிச் செல்லும்போது வாயிற் காவலர் பிடித்துக் கொண்டுபோய் இராவணனிடம் விட்டனர். இராவணன்,அவன் வந்த வரலாற்றைக் கேட்டு, அயலானோடு கூடி அரசைக் கொன்ற இரண்டகச் செயலைக் கண்டித்துக்கூறி, ராமனைத்தனியாக வந்து மன்னிப்புக் கேட்டு மனைவியை யழைத்தேகும்படி கூறெனக் கூறியனுப்பினான்.

அனுமன் சென்று கூறவே, ராமன் பணிவை மறுத்துப் படையுடன் சென்று இலங்கைப்புறத்துத் தங்கினான். ஒற்றரால் அறிந்த இராவணன், ராமனிடம் அதிகாயனைத் தூதுவிட்டான், ராமன் பணிவை மறுத்துப் போருக்குத் தயாரெனகி கூறிவிட்டனன். இராவணன் பேரவை கூட்டிப் போரில் முறியடிப்பதே ஏற்றதென முடிவு கண்டனன். அப்போது பீட்ணலெமுர்து ராமன் திறமை கூறிச் சீதையை விட்டு உறவு கொள்வோம, மீளானாயின் விந்த நாட்டை விட்டேனும் பகையின்றி