பக்கம்:இராவண காவியம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசரதர் தர்க்க ம் படலம் 72. கருநெடுங் கண்ணி கொண்ட கவலையை விடுவாய், முன்னுன் திருமணக் காலத் தேதி சிறியளா யிருந்தாய், மேலும் வருமுனே மணவறைக்கு மாநிலங் கொடுத்த தாலே புரிகுழல் இல்லை யென்று பொய்சொல்வா னாகை யாலே. 79. பண்டொரு நாளுன் மன்னன் பகைத்துமீன் கொடியு உயர்த்த தண்டமிழ் வழுதி யான சம்பரப் போரில் தோல்வி உண்டுள முதல் வேநீ யுதவியப் போரில் வென்றி கொண்டதற் குவந்து மன்னன் கொடுத்தபே றிரண்டுண் டன்றோ ? 74. தெருண்டநல் லறிவு வாய்ந்த தேமொழிக் கிளிவா யாம்பல் மருண்ட மான் விழிப்பொற் பாவாய்! மன்னவன் தன்பா லந்த இரண்டுபேற் றினை யுங் கொள்வாய்; இலையிலை யெனவே மண்ணில் புரண்டடி யணையிற் செங்கை பூணினுங் கலங்க வேண்டாம், 75. பாட்டளி முரலு மைம்பாற் பாவையே! அப்பே றென்றால் நாட்டைவிட், டின் றே யந்த ராமனைப் பதினான் காண்டு காட்டினுக் கோட்ட வேண்டும்; கன்னியன் மகற்குப் பட்டம் சூட்டிட. வேண்டு மொன் றால் என் நீ துணிந்து சொல்லாய், 76. பழமொழிக் கிளியே! நாடு பரதனுக் குரிய தென்னும் கிழமையை யெடுத்துக் கூறிக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளும்; ஒழிதரும் பதினான் காண்டி லுரிமையும்; உறுதி பெற்று வழிமுறை யுரிமை பூணடு பரதனும் மன்னி வாழ்வான். 78, பேறு-வரம். சம்பரன்-விநத நாட்டில் வாழ்ந்த பாண்டி மன்னன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/271&oldid=987782" இலிருந்து மீள்விக்கப்பட்டது