பக்கம்:இராவண காவியம்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அடி சொன்னவ னென்றோ டின்னும் சொல்லினா னில்லை; 'பொல்லான் இன்னினி யேகான் போக்கும் என மொழிந் திருக்குங் காலை, 100, புன்னெறி யமைச்ச னான சுமந்திரன் பொருந்தி யாங்கு துன் னிய தெனவே செல்வச் சுடர்முடி புனை நல் வேளை மன்ன வ! வுமைய ழைத்து வரச்சொன் னார் வசிட்டர் என்ன சொன்னவுன் சொற்கள் மேலும் துயரினைத் தருது மென்றான். 101. அரசனவ் வாறு கூறச் சுமந்திர கனலத் தேவி, வரிசையா யிரவு முற்றும் மணிமுடி புனையும் பேச்சை உரைசெயு மகிழ்ச்சி யாற்சோர் வுற்றிருக் கின்றார் மன்னன்; அரசனிங் கழைத்தா ரென்று ராமனை யழைத்து வாரும். 102. என் றுகை (கேசி சொல்ல அமைச்சனவ் விடத்தை விட்டுச் சென்றுபின் திரும்பி வந்து திரண்டுளார் அரசர் முன் றில் என்றனன்; மன்னன் மூத்தோய்! ஏனினும் போக வில்லை ? சென்று அழைத்து வாராய் சீக்கிரம் எனவே சென்றான். 103. மற்றவன் விரைந்து சென்று மைந்தனைக் கண்டு தந்தை சிற்றன் னே யகத்தி லுள்ளார் சீக்கிர மழைப்பா யென்று சொற்,றனர் எனவே, ராமன் துணைவனோ டெழுந்து சென்று பெற்றதை யிழந்தான் வெற்றி பெருதவன் தன்னைக் கண்டு. 104. புனத்திடை யரியே றுண்ட பொருகளி றுணர்வு சோம்பி இனத்திடை கிடப்ப போலக் கிடக்குது மெந்தை தாயைத் தனித்தனி தொழுதான்; மன் னன் தடங்கணீர் பெருக ராமா! எனத்துயர் வாய்வா ளாம லிருக்கவே; ராம னன்னாய்!