பக்கம்:இராவண காவியம்.pdf/419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11. என்னையொத்த வாலியோ டெழுந்தசுக்கி ரீவனாம் தன்னை யொத்து வடவராமன் றன்னையுற் றடைந்தவன் மூன்னையொத்திங் கென்னையு முடிக்கவேண்ணுங் கொடியவன் தன் னையொத்த கொடியரிந்தத் தமிழகத்தி லுண்டுமோ? 12. நம்பினோரைக் கொன்றொழிக்கு நல்லபாம்பி னல்லவன் தம்பியாகி வந்வெனக்குத் தான்பிறந்து "பசியடும் சம்பழித்துக் களைவளர்க்குங் கயவனுக் கடிமையாய்க் கொம்பைவெட்டுங் கோடரிக்குக் கொடிகாம்பு மாயினான். 13. புகல்வெட்க மாகுதென்ன புதுமையோ வுலகினிற் பகலிருக்கு மளவுமிக்க பழியிருக்க வேகுலப் பகைவனுக் கடிமையான பாவியைத் தமிழரெவ் வகையினரிற் கொலாதுவீட்டு வைப்பரோ வ றிகிலேன், படைக்கலந் தரித்தகா லு பதர்களோடு கூடியே நடைப்பிணந் தளைத்தக நடந்துசென் றி ராமனை அடைக்கலம் புகுந்தபாவி யறிவிருந்த தெண்ணவே மடைக்கல மெடுத்தகன் ந மங்கைபோலு நல்லளே? 15. எதிரி வந்து நகரைமுற்ற விருக்குநல்ல வேளைபார்த் ததரிலாத வதரிலேகி யாரியர்க்க டிமையாய்ப் புதரிருக்கும் 1 புலியையூரிற் புகுதவைப்பர் போலிய பதரையெண்ண வெண்ணவுள்ளம் பதைபதைக்கு தையகோ. அரசு வேண்டு மென்றெனக் கறிவுறுத் திருப்பனேல் வரிசையோடு முடிபுனைந்து மன்னனாக்கி டேன்கொலோ; பரிசிலாக வடிமைகொண்டு பகைவராற் றரப்படின் தரிசுகண்ட நிலமதோசெந் தமிழர்கள் பொறுப்பரோ? 18. 14. மடைக்கலம்-சோற்றுப்பானை. 16. அதர்-வழி.