பக்கம்:இராவண காவியம்.pdf/420

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராமன் கார் 17, களவுகொண்ட கள்வர்போலக் கையுங்காலும் கொண்டுமே பளகுகொண்ட பதர்களான படைத்தலைவர் தம்முடன் உளவுகொண்ட வொருவனாகி ஓடினானை நாளை நாம் விளிவுகொண்ட மாயினந்த மேவலர் சிரிப்பரே. 18. மானமின்றிப் பகைவனான வடவனுக் கடிமையாய்ப் போனபேடி தன்னைவீண் புலப்பதாற் பயனிலை யானையோடு குதிரைதே ரருந்திறல் மறவராஞ் சேனையோடு காலையே செருக்களம் வகுக்குவீர். 19, என்று தானை மன்னருக் கியம்பவத் தலைவரும் சென்றனர்வ ணங்கியன்ன செய்யவே திறலொடு, குன்றெனவு யர்ந்தமாடக் கோயிலைக் குறுகிய வென்றிகாணும் வேளை நாடி வேந்துகண் வளர்ந்தனன், 20. ஊரைவிட் டிரண்டகஞ்செய் தோடினோரை யொப்பவிப் பாரைவிட் டிருளெனும் பகைத்திர ளகலவே தாரைவெட்டி வாகைசூடுந் தமிழராண்மை காணவே காரைவெட்டிக் கதிர்பரப்பிக் கதிரவ னெழுந்தனன். 5. போர்க்கோலப் படலம் வேறு 1. சிற்றறி வுடையவன் சென்றி ராமனை உற்றதை யொற்றரா லுளவு கண்டனம்; நற்றமிழ் மறவர்கள் நவையில் வெஞ்சமர்க் கொற்றம துடையபோர்க் கோலங் கா ணுவாம். 2. பகலவன் செங்கதிர் பரப்பி வல்லிருட் பகைகெடக் கிழக்கினிற் றோன்றப் பாங்குடன் தொகுகதிர் வேலவன் சொன்ன சொற்படி தகைமிகுந் தமிழ்ப்படைத் தலைவர் சட்டென. 17. புளகு-குற்றம். விளிவு-சாவு. மேவலர்-பகைவர், தம்மினத்தினரையே கொளகிறாரென சி சிரிப்பர். 20. தார்-ஒருவகைப் படைவகுப்பு, கார்-இரவு. 1, நவை-குற்றம், தல் து. கொற்றம்-வீரம்.