பக்கம்:இராவண காவியம்.pdf/421

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போர்க்கோகப் படலம் 3. ஊனினை யுண்டுட லோம்பு மாரியத் தானையொ டவனையுஞ் சாம்ப லாக்கவே ஏனெனு முன்னுடன் றெமுக வென்னவே யானையின் மிசைமுரசறைவித் தாரரோ, 4, போர்முர சொலிசெவி புகாமுன் மள்ளர்கள் கார்முக விடியெனக் கனன்று சீறியே நீர்மரு வியநில நெளிய வாரியப் பேர்வெறு வியதெனப் பேசி யார்த்தனர். 5. இத்தனை நாளும் மிரண்டு தோள்களும் செத்தவன் கைகளிற் றேம்பி வீண்படப் பொத்திய தசைப்பொதி பொறுத்து வெம்பிட வைத்தன னிறையென வருந்து வார்சிலர். 6. பழந்தமி ழகத்திடைப் பகையின் நியதால் செழுங்கதிர் விளைந்திடாச் செய்யி னச்செயின் உழுந்தொழில் புரிந்திடா வுழவர் வாழ்வெனக் கழிந்தன பகலெனக் கலங்கு வார்சிலர், 7. தண்டமி ழகத்திடைச் சமரின் றாயதால் உண்டன மொக்கலோ டுவப்பக் கண்டுயில் கொண்டன மெழுந்தனங் குருதி யாற்றினைக் கண்டன மிலையெனக் கனலு வார்சிலர். 8. அருந்தமி ழகத்திடை யமரின் றாயதால் கருந்தனந் தேடி யுங் கலவை பூசியும் வருந்தினர்க் குதவியும் வைகல் போக்கியா மிருந்தனம் வீணிலென் றினையு வார்சிலர். செந்தமி ழகத்திடைச் செருவின் ருயதால் முந்தையோ ரொழுகிய முறையிற் றப்பியே வெந்தசோ றுண்டுநாள் வீணிற் போக்கியே வந்தன மெனவுளம் வருந்து வார்சிலர். 3. அவன் -ராமன், உடன் று-சினந்து. 4. வெறுவியது- இல்லையாகும். 6. செய்-விளை நிலம். 8. கரும்தனம்-பெரிய செல்வம், வைகல்- தாள்,