பக்கம்:இருட்டு ராஜா.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 9 சுத்தறமாதிரி சுத்திக் கிட்டிருக்கேன். அதனாலே திருடர் பயமே இங்கே கிடையாது. முன்னாலே இப்படியா இருந்தது? அந்தத் தெருவிலே திருடன் வந்தான். இந்த வீட்டிலே களவு போயிட்டதுன்னு அடிக்கடி ரிப்போர்ட் டுக் கிளம்புமே. ஐயாவாள் தலையெடுத்த பிறகு அப்படி யாப்பட்ட பேச்சுக்கே இடம் இல்லாமல் போச்சே. இதை யோசிக்க வேணாம்?” இவ்வாறு சொல்லிவிட்டு உரக்கச் சிரிப்பதும் இவனு டைய இயல்பாக வளர்ந்திருந்தது. அன்றும் முத்துமாலை வழக்கம்போல் தெற்குத் தெரு விலிருந்து கிளம்பி, சீட்டியடித்துக் கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டு தெருத்தெருவாக உலா வந்தான். அநேக மாக எல்லா வீடுகளும் அடைத்தே கிடந்தன. வழியில் யாரும் தென்பட வில்லை எவராவது வெளியே போயிருந்தால் கூட,வீடு திரும்புகிற பாதையில் முத்துமாலை நிற்கும் தெருவைத் தவிர்த்து சுற்றி வளைத்துச் சென்று விடுவார்கள், அவன் ஊராரை ஒன்றும் செய்ய மாட்டான்தான். இருந்தாலும் "வீண் வம்பு எதுக்கு? அவனுக்கு எதிரே வருவானேன்; அவன் எதையாவது கேட்க, நாம் ஒன்றுசொல்ல, அவன் சண்டை வளர்க்க-இதெல்லாம் என்னத்துக்கு? நாம முன்னெச் சரிக்கையா விலகி இருப்பதுதான் நல்லது' என்பது அந்த ஊர்க்காரரின் பாலிசி. நேரம் ஆக ஆக அவனுடைய கூச்சலும், கும்மாளியும் அதிகரிக்கும். அவனுடைய தோழர்கள் சாராயம், கறி, காரம் மிகக் கலந்த மொச்சைக்கொட்டை முதலியவற் றோடு தயாராக இருப்பார்கள். ஊருக்கு ஒதுக்குப் புறத்தி லிருந்த அம்மன் கோயிலில் கூடி எல்லோரும் அவசரம் இல்லாமல் அவற்றைக் காலி பண்ணுவார்கள். பிறகு உரத்துப் பேசியவாறும், சண்டையிட்ட படியும், கண்ட