பக்கம்:இருட்டு ராஜா.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


10 0 இருட்டு ராஜா படி ஏச்சுக்களை உதிர்த்துக்கொண்டும் தெருத்தெருவாக அலைவார்கள். திரும்பவும் கோயிலுக்குப் போய் குடிப் பார்கள். கூச்சலிட்டுத் திரிவார்கள். சீட்டாடுவார்கள். தாயக் கட்டம் விளையாடுவார்கள். இப்படி எல்லாம் செய்வதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. முத்துமாலை யையும் அவனுடைய சகாக்களையும் அடக்கி விட வேண்டும் என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிலபேர் முயன்றது உண்டு. அவர்கள் வெற்றி பெறவில்லை. எடுத்த எடுப்பிலெயே அரிவாளையும் கத்தியையும் துக்குகிறவர்கள் முன்னே எப்படித் துணிந்து நிற்க முடியும்?' என்று அவர்கள் சொன்னார்கள். அப்படியும் துணிந்து கிளம்பிய ஒன்றிரண்டு பேர் சரியான பாடம் கற்றுக்கொண்டு ஒய்ந்து போனார்கள். அப்புறம் எவரும் முத்துமாலையின் வழியில் குறுக்கிட தைரியம் கொள்ள வில்லை. வானத்தில் முழு நிலா அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் மங்கல் ஒலி ஊரை வெளிச்சப் படுத்திவிட வில்லை. வெளிச்சத்தைப் பற்றியோ இருட்டைப் பற்றியோ கவலை கொள்ளாத முத்துமாலை, அம்மன் கோயிலில் வழக்கம் போல் பொழுதைப் போக்கிவிட்டு, தனது இரண்டாவது சுற்றுலாவை நடத்திக் கொண்டிருந்தான். கோட்டைத் தெரு எனப்பெயர் பெற்றிருந்த ஒரு சிறு தெருவை அடைந்ததும் அவன், கோட்டைக் கொத்தளம் மீதிலேறி' என்ற பாட்டை அலறி ஆர்ப்பாட்டம் பண்ண ಛಿ:}{Y Sಳ{ frಿಜ# - w அப்போது மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க லாம். ஊர் நெடுகிலும் வேறு சத்தம் எதுவும் கிடையாது. சுடுகாட்டு அமைதி.