பக்கம்:இருட்டு ராஜா.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்31
 

 தோப்புக் குத்தகைக்காரன், அகப்பட்டுக் கொண்ட எலிக் குஞ்சை கொப்பரைத் தண்ணீருக்குள் முக்கி முக்கி எடுப்பதுபோல ஐயர் பையனை ஆழக் கிணற்றினுள் இறக்கியும் மேலே தூக்கியும் கயிற்றை ஊஞ்சலாட்டியும் விளையாடினான்.

பையன் பயந்து நடுங்கினான். “ஐயா, ஐயா, கிணத்திலே போட்டிராதிங்க. மன்னிச்சிடுங்க. தெரியாமப் பண்ணிட்டேன். இனி மாமரத்துப் பக்கத்திலே மறந்துபோய் கூடப் போக மாட்டேன்” என்று அலறினான்.

தோப்புக்காரனுக்கு குஷி பிறந்தது, “ஏ, தண்ணிக் குள்ளே முக்கப் போறேன். ... கயிறை விட்டிரப் போறேன்” என்று வேகமாக ஆட்டினான்.

பையன் பயந்து அலறினான்.

தோப்புக்காரன் சிரித்தான். “ஏஹேய், ஐயரே ரெண்டரே, அமுக்கிப் புடிச்சாஒண்னரே! பையன்களா, எல்லாரும் சேர்ந்து பாடுங்க! ஐயரே ரெண்டரே, அமுக்கிப் புடிச்சா ஒண்ணரே” என்று ராகம் போட்டுக் கத்தினான்.

அவனுக்கு வேண்டிய பையன்கள் அதைக் கோரஸாக எதிரொலித்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் முத்துமாலை அங்கே வந்து சேர்ந்தான். அவன் வளர்ந்து பெரியவனாகி, பெயர் பெற்றுச் சில வருடங்கள் ஆகியிருந்த சந்தர்ப்பம் அது. நிலைமையைப் புரிந்து கொண்டான். கிணற்றினுள் தொங்கிய பையனின் பரிதாபகரமான தோற்றம் அவன் மனசைத் தொட்டது.

“ஏ செல்லையா, இதென்ன வேலை? ஒரு மாங்காய்க்காக இந்த பையனைக் கொல்லணுமா? மேலே துாக்கு அவனை” என்று கூப்பாடு போட்டான். “எல்லோரும்