பக்கம்:இருட்டு ராஜா.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32இருட்டு ராஜா
 

 வேடிக்கை பார்த்து நிக்கிறீங்களே, வெட்கமாயில்லே? அந்தப் பையன் நிலையிலே உங்க மகனோ, பேரனோ இருந்தா, இப்படிச் சும்மாகூடி வேடிக்கை பாப்பீங்களா?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கத்தினான் முத்துமாலை.

“இவனை சாகடிக்கவா போறேன்? சும்மனாச்சியும் பயம் காட்டலாமேன்னு”

“பயத்தினாலே அவன் செத்துப் போவான் போலிருக்கு. சீக்கிரம் தூக்கு மேலே” என்று முத்துமாலை அவசரப்படுத்தினான்.

தோப்புக்காரன் சிறுவனை மேலே தூக்கி, கட்டுகளை அவிழ்த்து விட்டான். அவன் கிணற்றுத் துவளத்தின் அருகில் நின்றபோது அவன் எதிர்பாராத நிலையில், முத்துமாலை குத்தகைக்காரனைப் பிடித்து உலுக்கி கிணற்றுப் பக்கமாகத் தள்ளினான்.

செல்லையா பதறிப் போனான். அவன் உள்ளே விழுத்திருக்க வேண்டியவன்தான். முத்துமாலையே அவனைப் பிடித்துக்கொண்டான். அவனுடைய உடல் நடுங்கி கொண்டிருந்தது.நெஞ்சு படக் படக் கென்று அடித்தது. நிஜமாகவே அவன் பயந்துவிட்டான். “என்னய்யா இது! ஒரு வேளையைப் போல ஒரு வேளை இருக்குமா? இசை கேடா தான் உள்ளே விழுந்திருந்தால்” என்று குறை கூறினான்.

முத்துமாலை சிரித்தான். “பெரியவனான உன் பாடே இப்படின்னா, அந்தச் சின்னப் பையனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீ இப்ப சொன்னது அவனுக்கும் பொருந்தும் இல்லையா? உனக்கு ஒரு பாடம் கற்பிக்கத்தான் இப்படிச் செய்தேன்” என்றான்.

குத்தகைக்காரன் அதன் பிறகு முத்துமாலையை விரோதியாக பாவித்துத் திரிந்தான். அதைப் பற்றி முத்து மாலை கவலைப்படவும் இல்லை,