பக்கம்:இருட்டு ராஜா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்51

 மாட்டாள்; அவள் கைராசியைப் புகழ்ந்து பாராட்டவும் மாட்டாளே என்று மகன் எண்ணிக் கொண்டான்.

அம்மா விஷயத்தை மறந்து விடவில்லை. தொடர்ந்தாள். “வீட்டோடு ஆரம்பிச்ச பலகாரக் கடை நல்லாத் தான் நடந்தது. காலையிலே இட்டிலி, உப்புமா, காப்பி சாயங்காலம் வடை, பஜ்ஜி, காப்பின்னு ஒரே அமக்களம் தான். இவ அலுக்காம உழைச்சா, ஒரு வருஷத்துக்கு மேலேயே நடந்திருக்கும். பிறகு, கடையைமூடிட்டாங்க”

“ஏனாம்.”

“வர்ற பணத்தை எல்லாம் செலவு பண்ணிக்கிட்டே இருந்தால், கடை எப்படி நடக்கும்? கடைக்கு சாமான்கள் வாங்கப் பணம் வேண்டாமா?”

“ஊர்லே பல பேரு கடன் சொல்லி வாங்கித் திண்ணுருப்பாங்க. அப்புறம் கடனை அடைச்சிருக்க மாட்டாங்க.”

“வழக்கமா அப்படி நடக்கிறதுதான். ஆனா முத்துமாலைகிட்டே அந்தக் கதை நடக்கலே. அவன் ஏசியும் பேசியும், அடிச்சும் மிரட்டியும் பாக்கியை எல்லாம் வசூல் பண்ணிப் போட்டான். கடையை ஒழுங்கா நடத்துறதுக்குக் கையிலே முதல் இல்லே. அது தான் காரணம். அதுக்குப் பிறகு தனபாக்கியம் அவ்வப்போது இதுமாதிரி பலகாரம் செய்து வீடு வீடாகப் போய் கேட்டு விக்கிற வேலையை செய்து வாறா. காலையிலே இட்டிலி வியாபாரம் உண்டு. தேவையானவங்க, வீடு தேடிப் போயி வாங்கி வருவாங்க. எப்படியோ கதை நடக்குன்னு வய்யி!” என்று முடித்தாள் அம்மா.

“முத்துமாலை பாடு கஷ்டம்தான்னு சொல்லு. கொஞ்சமாவது வசதி இருக்கும்னு நெனைச்சேன்” என்று தங்கராசு. முணு முணுத்தான்.

“அநேகம் பேரு எப்படி வாழ்க்கை நடத்துறாங்க என்பதே புரியவில்லை. வெளிப்பார்வைக்கு எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/53&oldid=1139019" இலிருந்து மீள்விக்கப்பட்டது