பக்கம்:இருட்டு ராஜா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62இருட்டு ராஜா


அவன் ஒட “டேய் மரியாதையா நின்னுரு. நாங்க துரத்திப்புடிச்சோம்னா உன்னை தொலிஉரிச்சிடுவோம். ஜாக்கிரதை” என்று முத்துமாலை கத்தினான்.

“அடேய் பக்கத்திலே வந்தா ஆள் குளோஸ். நான் யாரு தெரியுமாடா? ஒரு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போய் இருந்திட்டு வந்தவன்டா. இன்னொரு கொலைக்கு அஞ்சமாட்டேன்” என்று திருடன் சவால் விட்டான்.

“ஒகோ, நீ தானா! வெளியே வந்ததிலேயிருந்து பெரிய சூரன் மாதிரி அலையிதியே. இன்னிக்கு மாட்டிக் கிட்டே. டேய், சுத்திவளைச்சு வாங்கடா” என்று முத்து மாலை கூவினான்.

இதற்குள் அவன் ஆட்கள் திருடனை நெருங்கிக் கொண்டுதாணிருந்தார்கள். ஊர் ஆட்களும் விளக்குகள், கம்புகள் சகிதம் வந்தார்கள்.

திருடன் ஒரு கத்தியை எடுத்துக்காட்டிக்கொண்டே இருட்டை நோக்கி ஒடலானான்.

முத்துமாலை ஒரு அறிவிப்பு போல் என்று விசிலடித்தான். அதே வேகத்தில் அவனுடைய அரிவாள் முன்னே பாய்ந்தது. குறிபார்த்து அவன் வீசிய அரிவாள் திருடனின் காலில் பலமாக இறங்கியது.

“அம்மாடி” என்று கத்திக் கொண்டு திருடன் காலைப் பிடித்தபடி கீழே உட்கார்த்து விட்டான்.

சகாக்கள் அவனைப் பற்றிக்கொண்டார்கள். ஒருவன் அவன் கைக்கத்தியைத் தட்டிப் பறித்தான். முத்துமாலை தன் அரிவாளை எடுத்துக் கொண்டான். அவனுடைய மடியைச் சோதித்து தங்கச் சங்கிலியையும் எடுத்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இருட்டு_ராஜா.pdf/64&oldid=1139122" இலிருந்து மீள்விக்கப்பட்டது