பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறப்போர் அண்ணல் வாயிலாக நாட்டின் விடுதலையை விரைவுபடுத்த முடியுமென்று லட்சுமி நரசிம்முலு நம்பியிருக்க வேண்டும். ஆம். அவர் நம்பிக்கை வீண் போகவும் இல்லை. இங்கிலாந்து மேலிட அரசின் நேரடி நிருவாகத்தில் இந்தியா வருவதென்பதற்கு இங்கிலாந்து மக்கள் சபையின் பொறுப்பில் இந்தியா வருவதென்பதே பொருள். அந்நிலையில் உலகப் பாராளு மன்றங்களின் தாயாய் விளங்கும் இங்கிலாந்துப் பாராளு மன்றம், என்றேனும் ஒரு நாள் பாரத நாட்டிற்கு விடுதலை தந்தே தீருமென்று தேச பத்தர் லட்சுமி நரசிம்முலு வருங்கால அறிவோடு கனவு கண்டார் போலும் ஆம் இற்றைக்குச் சரியாக 105 ஆண்டுகட்கு முன் தமிழகத்தின் தலை நகரில் வாழ்ந்த ஒரு மெருமகனார்-ஒரு பெருந்தலைவர் இப்படிக் கனவு கண்டார் என்று எண்ணும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறதல்லவா ? ஒரு வகையில் உண்மையைச் சொல்லுமிடத்து 13000-14000என்று மக்களிடம் கையொப்பம் பெற்று, எழுதுகோலின் துணைகொண்டு நாட்டு விடுதலை இயக்கத்தை நடத் திய நல்லறிஞர் திரு. லட்சுமி நரசிம்முலு, தமிழகத் தின் விடுதலைக்காக முதல் முழக்கம் புரிந்த பூலித் தேவருக்கோ, அவர் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வீர பாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள், வேலூர்ச் சிப்பாய்கள் ஆகியோர் நிகழ்த்திய ஆயுதப் போருக்கோ எள்ளளவும் குறையாத மதிப்புடைய அறப்போர் நடத்தினர் என்றே கூறவேண்டும். 1855-ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 16-ஆம் தேதி திரு. லட்சுமி நரசிம்முலு 14000 பேருடைய கையொப்பங்களுடன் அனுப்பிய மனுவை ஆல்பி