பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 67 நாட்டிற்கு நேர்ந்தது. 1892-ஆம் வருஷம் மார்ச்சு மீ இரண்டாம் தேதி அவர் உலக வாழ்வை நீத்தார். அந்தத் துக்கச் செய்தியைக் கேட்டு நான் துடிதுடித்துப் போனேன்! அ வ ரு ைட ய பழக்கம் எனக்கு ஏற் பட்டதையும் அதல்ை பழந்தமிழ் நூலாராய்ச்சி யிலே நான் புகும்படி நேர்ந்ததையும் எண்ணிப் பார்த்தேன். அவருடைய தூண்டுதல் இராவிட்டால் சிந்தா மணியை நான் அச்சிடுவது எங்கே சங்க நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக் கும் எனக்கும் என்ன சம்பந்தம் துக்க உணர்ச்சியோடு சில பாடல்களே எழுதினேன். : சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண் டையும் புத்தக வடிவத்திற் பார்க்கவேண்டுமென்று முதலியார் எவ்வளவோ ஆ வ .ே லா டி ரு ந் தார். அவர் இருந்த காலத்தில் அவ்விரண்டையும் கிறை வேற்றும் பேறு எனக்கு இல்லாமற்போயிற்று' திரு. இ ரா ம ச மி முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகொழுகும் சொல்லோவியமாக ஆங்கிலத்தில் அறுபது ஆண்டுகட்குமுன் சுருங்க வரைந்துள்ள அறிஞர் திரு. பரமசிவம் பிள்ளே திரு. முதலியார் அவர்களின் அரிய பண்பு நலன்’ பற்றிக் கூறியுள்ளதன் தமிழாக்கம் வருமாறு : " திரு. முதலியார் எளிமையும் கே ர் ைம யு ம் உண்மையும் உருவாய்க் கொண்டவர்; அடக்கம் நிறைந்தவர்; கோ ைழய ல் லர்; கருணே மிக்கவர்; ஆனல், கண்டிப்பு நிறைந்தவர்; சுதந்தர உள்ளம் படைத்தவர்; ஆனால், பிறருக்காக மனமார விட்டுக் கொடுக்கும் பண்பு கலம் வாய்ந்தவர். சுருங்கச் சொன்னல், தயவும் திடமும், உருக்கமும் உறுதியும் கிறைந்த உத்தமர் அவர் என்னலாம்.”