பக்கம்:இரு விலங்கு.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ഖു് ഒ്രതീഴ്ക 91

சிலரை ஏவிப் பாரிசாத மலரைப் பறித்து வரும்படி அனுப்பினுள் ஆல்ை பாரிசாக மரத்தைச் சுற்றிக் காவல் இருந்தவர்கள் இவர்களே மரத்தின் அருகில் போக விடாமல் விரட்டி அடித்தார்கள். 'இந்திராணி குடு கின்ற பாரிசாக மலரைப் பூ வுலகத்தில் பிறந்தவர்கள் சூடிக்கொள்ள இயலுமோ?' என்று கூறி விரட்டி ஞர்கள். இவர்கள் திரும்பி வந்து சத்தியபாமையிடம் நடந்ததைச் சொல்ல, அப்பெருமாட்டி கண்ணபிரானே அழைத்துவரச் சொன்னுள் -

அதுகேட்ட கண்ணபிரான் மகிழ்ச்சி அடைந்தான்; "பாரிசாத மரத்தைப் பெயர்த்துச் சத்தியபாமையின் வீட்டு முற்றத்தில் நடுவதாக வாக்களித்து வந்தோம்: அதனேக் காரணம் இல்லாமல் செய்வது முறை அன்று. ஆகையால் இப்படி ஒரு நிகழ்ச்சி வந்து சேர்ந்தது நல்ல தாயிற்று' என்று அவன் உவகை அடைந்தான். உடனே சத்தியபாமையை அமுைத்துக் கொண்டு பாரிசாக மரம் இருந்த இடத்தை அடைந்தான். அங்கே காவல் இருந்த மகளிர்கள் எதிர்த்தார்கள். கண்ணன் மரத்தைப் பறித்து எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவனே மேற்செல்ல விடாதபடி பலர் அவனேத் தடுத்துப் பொருதார்கள். எல்லோரும் ஆயுதங்களுடன் நின்று போர் செய்தனர். அவர்களுடன் ஆயுதம் தாங்கிப் போரிடுவது நல்ல்து அல்ல என்று எண்ணிய கண்ணன் தன்னுடைய கரத்தில் உள்ள வலம்புரிச் சங்கத்தை எடுத்து ஊதினன். சங்கம் வாத்தியமானலும் திருமாலின் கையில் ஐந்து ஆயுதங் களில் ஒன்ருக அமைந்திருக்கிறது. ஆயுதம் பகைவர்களே மோதி வெற்றி பெறுவது. சங்கு ஊதி வெற்றி பெறுவது. கண்ணபிரான் தன் சங்கத்தை ஊதினவுடன் அந்த ஒலி யினல் எதிர்த்தவர்கள். அத்தனை பேரும் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்கள். கருட வாகனத்தின்மேல் அந்த மரத்தைவைத்துக்கொண்டு சத்தியபாமையுடன் மீண்டும் துவாரகைக்கு வந்து சேர்ந்தான். -