பக்கம்:இரு விலங்கு.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 93

அந்த ஒசையும் இந்த ஒசையும்

திருமாலினுடைய உந்தி மண்கமழ் உந்தி, அது மண் வாசனை வீசுகின்றதாம். அவன் நிறைய மண்ணைத் தின்றவன்கு திருமாலின் வயிற்றில் அண்டபிண்ட சரா சரங்கள் எல்லாம் இருப்பதனால் அவனே மண்தின்றவன் என்று சொல்வது ஒரு.வழக்கு இங்கே அந்தச் செய்தி யைச் சுவைபடச் சொல்கிருர் அருணகிரியார். ஒருகால் திருமால் வேறு எதையாவது தின்று ஊதியிருந்தால் பல மாக ஊதியிருப்பான் மண்ணேத் தின்றுவிட்டு ஊஇய தால் அவனுக்குத்தொனி அதிகமாக வரவில்லே போலும் என்று நினைக்கும் படியாகச் சொல்கிரு.ர். . கண்ணன் இது செய்ய வேண்டுமென்று நினைத்து முயன்று ஊதியது வலம்புரியோசை. ஆனல் முருகப் பெருமான் திரு அரையிலுள்ள கிண்கிணியோ அவன் விளேயாடும்போது தானே ஒலித்தது, கிண்கிணி ஓசையை விட வலிந்து ஊதின வலம்புரி ஓசைதான் மிக வலிமையுடையதாக இருக்கவேண்டும். ஆனல் இங்கே, திருமால் முயன்று மூச்சைப் பிடித்து ஊதிய வலம்புரி யோசை முருகப்பெருமானுடைய கிண்கிணி ஒசைக்குப் பக்கத்தில் வரமுடியாது என்று பாடுகிருர்

தேவலோகத்தில் கற்பக மரச் சோலே ஒன்று இருக் கிறது; அந்தச் சோலேயில்தான் பாரிசாத மரம் வளர். கிறது; அங்கிருந்து ஊதின அந்தச் சங்கின் ஒசை தேவ லோகம் முழுவதும் கடக் கேட்கவில்லே, அந்த மரம் மணம் வீசுகின்ற சோலேயிலும், தேவர்கள் நீராடுகின்ற வாவிகளிலும் கேட்டது. ஆனல் முருகப்பெருமானுடைய கிண்கிணி ஓசையோ சர்வலோகமும் கேட்டதாம். அதை

அடுத்தபடி சொல்ல வருகிருர் அருணகிரியார், வேல் எடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளே திருஅரையில் கிண்கிணி ஓசை புதின லுலகமும் கேட்டதுவே,