பக்கம்:இரு விலங்கு.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வலம்புரியும் கிண்கிணியும் 99

"உலேப்படும் மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல் வலைப்படு கின்ருன் போல மறுகியே மாழ்கி நின்றன் கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலில் தோன்றி அலேப்படு செய்கை யன்ருே அறுமுகன் ஆடல் எல்லாம்.'

பெருமான் செய்கின்ற அத்தனையும் திருவிளையாடல் கள். விளையாட்டில் ஈடுபடுபவன் குழந்தை. குழந்தை எது செய்தாலும் அதனே விளையாட்டு என்றே சொல் வார்கள். ஆகவே உருவத்தாலும் குழந்தைத் திருமேனி கொண்ட எ ம் பெ ரு மா ன் செய்யும் அத்தனேயும் விளையாடல்களே என்பதில் சற்றும் ஐயமில்லை.

திண்கிரிகள் எல்லாம் சிந்த விளையாடுகின்ற முருகன் அந்த விளையாட்டில்ை அடியார்களுக்கு நலமேசெய்தான், இந்திராதி தேவர்கள் முதலில் அஞ்சினலும், அவன் பெருவீரம் உடையவன், நமக்கு கலம் செய்யத் திரு அவதாரம் செய்திருக்கிருன் என்று உணர்ந்த பிறகு மகிழ்ந்தார்கள் ஆல்ை சூரன் முதலியோர் இப்படி ஒரு பிள்ளை தோன்றி இருக்கிறதே என்று உணர்ந்து நடுங்கினர்கள், தன்னுடைய சிறந்த வலிமையையும், அருளேயும் புலப்படுத்த முருகப்பெருமான் திரு அவ தாரம் செய்தவுடன் இல்வாறு பலவகைத் திருவிகள யாடலில் ஈடுபட்டான் என்று. கந்தபுராணம் பேசு கின்றது. . . . "

அப்படித் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை, குழவி உருவங்கொண்டு திருவரையில் கிண்கிணியை அணிந் திருக்கிருன். அவன் குதித்து விளயாடும்போது, தாவி விளையாடும்போது, மசிலமேலே வேலை வீசி விளையாடும் போது, அந்தக் கிண்கிணி ஒலிக்கிறது. அந்த ஒசை எல்லா உலகமும் கேட்டதாம். மேல் ஏழு உலகமும், கீழ் ஏழு உலகமும் ஆகப் பதினன்கு உலகம் உண்டென்று சொல்வார்கள். அந்தப் பதின்ைகு உலகங்களிலும் அந்த ஓசை கேட்டது. ...' .