பக்கம்:இரு விலங்கு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இரு விலங்கு

 பேருக்கும் தலைவனாக  இருப்பவன் ஆண்டவன், யமன் என்ற கற்பனை எவ்வாறு எழுந்தது என்பதைப் பற்றி யும் யமனுடைய இயல்புக்கும் இறப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியும் பல முறை சிந்தித்திருக்கிறோம்.

பிரமன்

 பிரமன் என்ற வடிவத்தில் பிறப்பைத் தரும் சக்தியை அமைத்திருக்கிறார்கள். படைத்தல் என்பது ஒரு பேராற்றல். அதற்கு இன்றியமையாதது அறிவு. பணம் உள்ளவன் ஏதேனும் ஒன்றைப் படைக்கவேண்டுமானால் அறிவில் வல்லவர்களைக் கொண்டுதான் படைக்க முடியும். அறிவு உள்ளவன் பணத்தைத் திரட்டிக்கொண்டு வேலை செய்ய ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான். வெறும் பணம் உள்ளவனோ அறிவு இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. படைப்புத் தொழிலைக் கொண்ட பிரமன் பேரறிவாளனாக இருக்கவேண்டும். இதனை எண்ணியே அவன் எப்போதும் வேதத்தை ஒதுகிறான், அவன் தன் நாக்கில் கலைமகளை வைத்திருக்கிறான் என்று புராணக் கதை சொல்கிறது. வேதம் என்பது விதிப்பன விதித்து விலக்குவன விலக்குவது. நம்முடைய நாட்டில் பிற நூல்களுக்குக் கிடைக்காத பெருமை வேதத்திற்குக் கிடைத்திருக்கிறது. அதை அபெளருஷேயம் என்றும், அநாதி என்றும் போற்றுகிறார்கள். இறைவனுடைய திருவாக்கே வேதம் என்று சொல்வார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாகக் காது வழியாகக் கேட்டு ஸ்வரம் மாறாமல் வேதம் இந்த நாட்டில் நிலவி வந்திருப்பதே ஆச்சரியங்கள் எல்லாவற்றிலும் பெரிய ஆச்சரியம். பிரமன் வேதத் தில் வல்லவன். ஆதலின் அவனை 'வேதியன்’ என்றும் சொல்வார்கள். எல்லாப் பொருளையும் தத்துவத்தையும் உணர்ந்து படைக்கவேண்டி இருப்பதால், அவனுக்கு வேத அறிவு நிரம்ப வே ண் டி யி ரு க் கிற து; அது மாத்திரம் அன்று. எல்லாக் க லை க ளு க் கு ம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/26&oldid=1297118" இலிருந்து மீள்விக்கப்பட்டது