பக்கம்:இரு விலங்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இரு விலங்கு


பழைய அநுபவம்

"ருகால் பழைய காலமாக இருந்தால் படைப்புத் தொழில் உடையோம் என்ற செருக்கினால் என்னைப் பட்டோலையில் இடுவதற்கு வாய்ப்பு உண்டு. வேலையில் புதிதாகப் புகுந்தவர்கள் சில தவறுகள் செய்வது இயற்கை. ஆனால் இந்தப் பிரமனோ, பலகாலமாகப் படைப்புத் தொழிலை நடத்தி வருகிறான். அதுமட்டு மன்று. தான் செய்த பிழைக்காக முருகப்பெருமானு டைய தண்டனையையும் பெற்றிருக்கிறான். அப்படி இருக்க, அவன் இப்போது மீண்டும் தவறு செய்வானா? செய்யமாட்டான். செய்வதாய் இருந்தால் அவன் பழைய அநுபவத்தை மறந்திருக்க வேண்டும். அந்தச் செயல் தான் நமக்குத் தெரியுமே! தன்னை வணங்காமல் சென்ற மையினால் முருகப்பெருமான் பிரமனுக்குக் காலில் தளை யிட்டுச் சிறையில் அடைத்தான். அந்த அநுபவம் அவனுக்கு மறந்திருக்காது. ஒருகால் மறத்திருந்து இப்போது என்னைப் பட்டோலையில் இட்டுவிட்டானோ? எழுதிவிட்டானோ?" என்று கேட்கிறார்.

    பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் பண்டு தளை 
    தன் காலில் இட்டது அறிந்திலனோ?

 'ஒருகால் அதனை மறந்து பட்டோலையில் என் பெயரை இட்டுவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானலும் எனக்கு யாதொரு பயமும் இல்லை. நான் முருகப்பெருமானைப் புகல் அடைந்தவன். தன் னுடைய அடியார்களுக்கு இப்படி ஒரு நிலை வரப் போகிறது என்றால், முற்றறிவு உடையவனாகிய அவன் கணத்தில் அறிந்துகொள்வான். நான் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அவன் பிரமனைச் சும்மா விடமாட்டான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/34&oldid=1402445" இலிருந்து மீள்விக்கப்பட்டது