பக்கம்:இரு விலங்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 உள்ளந்தாள் நின்றுஉச்சி அளவும் நெஞ்சாய்

         உருகாதால், உடம்புஎல்லாம் கண்ணாய் அண்ணா
    வெள்ளந்தான் பாயாதால்; நெஞ்சம் கல்ஆம்; 
         
         கண் இணையும் மரம்ஆம்தி வினையி னேற்கே."
 ஆகவே, நமக்குக் கண் இருந்தாலும், கருத்திருந் தாலும், ஆண்டவனது அழகுத் திருக்கோலம் கண்டிருந் தாலும் நம்முடைய உள்ளத்தில் பக்தி நிறைவு இருக்க வேண்டும். அது இல்லாதவரையில் ஆண்டவன் நேரே வந்து நி ன் றா லும் நாம் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டோம்; கை குவித்து நின்று உருகமாட்டோம்.
 அருணகிரிநாதப் பெருமானுக்குத் திருச்செங்கோட் டுக்குப் போய்த் தரிசனம் செய்யும்போது உள்ளம் நன்றா கக் கெட்டித்த வெடி மருந்துக் குழாய் போல இருந்தது; திரியில் நெருப்பு வைப்பது போல அவருடைய கண்கள் அழகுத் திருக்கோலத்தைப் பார்த்தன. உடனே அவர் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது. அப்போது பாடிய பாட்டுத்தான் இது. அந்த ஆனந்தத்தில் அவர் சிறிது குறையைக் கண்டார். அது குறையன்று. அவருடைய உணர்ச்சி அந்தக் குறையைச் சொல்லும் வகையினால் புலனாகிறது. 

கண் போதாமை

 ம்பராமாயணத்தில் இப்படி ஒர் இடம் வருகிறது;

சீதாபிராட்டியின் அழகைக் கம்பர் வருணிக்கிறார்.அவளைக் கண்டவர்கள் கண்ணை வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். அந்தக் காட்சிக்குக் கரை காணாமல் திணறினார்களாம். இரண்டு கண்ணுடைய மக்கள் அவளுடைய பேரழகைக் கண்டபோது, "ஐயோ! இடை யிடையே கண்ணை இமைத்து அல்லவா காணவேண்டி யிருக்கிறது? நமக்கு இமையா நாட்டம்இல்லையே!" என்று வருந்தினார்களாம். இமையாத கண்ணைப் பெற்றவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/50&oldid=1402465" இலிருந்து மீள்விக்கப்பட்டது