பக்கம்:இரு விலங்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இரு விலங்கு


இங்கே முருகன் கண்ணுக்கு அடங்காத பேரழகன் என்பதை வற்புறுத்த வருகிறவர், அதற்கு ஏற்ற வகையில் அவள் திருமாலுக்கு மாப்பிள்ளைத் துரை என்ற தொடங்கினவர், சிவபெருமானுடைய பிள்ளை என்பதை,

மன்றாடி மைந்தனை

என்று சொல்கிறார். நடராசப் பெருமானுக்குக் குழந்தை என்று இங்கே சொல்வதற்கு'என்ன காரணம்? நடராசப் பெருமான் கூத்தாடும் பெருமான். எல்லாக் கலைகளும் சேர்ந்த கலை நடனக் கலை; நடனம் செய்கிறவர்கள் தம்மை அழகுபெற அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள். கலைச் செல்வர்களிடத்தில் அழகு நிரம்பியிருப்பதை இன்றும் நாம் பார்க்கிறோம். இயற்கை அழகு நிரம்பிய மாமியார் மாமனாருக்கு மாப்பிள்ளையாக இருக்கிற முருகனை, பல அலங்காரங்கள் செய்துகொண்டிருக்கிற கலைச் செல்வருக்குப் பிள்ளை என்று சொல்வதனால் அவனுடைய அழகுப் பெருமை பின்னும் நிரம்புகிறது.

மேலான தேவன்

ப்படியுள்ள பெருமான் மிகச் சிறந்தவன் என்பதை அடுத்தபடி சொல்ல வருகிறார். அவன் தேவர்களுக்குள் ஒரு தேவன் அல்ல.

வானார்க்கும் மேலான தேவனை

.

சைவம், வைஷ்ணவம் என்ற இரண்டு சமயத்தினரும் முருகனைக் கொண்டாடுவதற்கு உரிமை இருக்கிறத. வைஷ்ணவர்கள் தங்கள் வீட்டு மாப்பிள்ளைகள் என்று கொண்டாடலாம். சைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளை என்று கொண்டாடலாம். வானவர்களுக்கோ அந்த இரண்டு மூர்த்திகளும் தலைவர்கள். ஆகையால் இரண்டு வீட்டுக்கும் உரிமை உடைய பெருமானை, 'எங்கள் அனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/54&oldid=1297901" இலிருந்து மீள்விக்கப்பட்டது