பக்கம்:இரு விலங்கு.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ក្សហ៊ា ទំនាំ இ5

ஒர் இடத்தில் இருக்கிறதென்ருல் யார்தாம் அதைப் பெற முயற்சி செய்ய மாட்டார்கள்? -

இந்த அரிய பெரும்பொருள் நாம் வாழும் உலகத்தில், நாம் அடையாளம் கண்டுகொள்ளும் ஊரில் இருக்கிறது. அந்த அடையாளத்தைப் பின்னே சொல்கிருர் முதலில், மேதினியில்

என்கிறார். நாம் வாழ்கிற பூமியில்தான் இவ்வளவு பேரழகுடைய பெருமான் எழுந்தருளியிருக்கிருன் என்று தொடங்குகிறார். o

- - அடையாளம்

திருச்செங்கோட்டை அடையாளத்தோடு சொல் கிறார். - - - -

சேலார் வயல்பொழில் செங்கோடன, அந்த ஊருக்குள் போகும்போது அவனுடைய அருளி ல்ை எங்கும் பச்சைப் பசேல் என்று வயல்கள் பரந்திகுப் பதைக் காணலாம். இது அருணகிரியார் கண்ட திருச் செங்கோடு, வயல் வளம் உண்டாவதற்குக் காரணம் நீர் வளம் நிரம்பியிருந்ததுதான், அங்கே சேல் மீன்கள் உலாவுகின்றன. பொழில்களும் அங்கங்கே இலங்கு கின்றன x

. . . சேலார் வயற்பொழில் . . . . . சேல் மீன்கள் நிறைந்திருக்கிற வயல்களும் பொழில்களும் நீர்வளத்தையும் மக்களுடைய நீர்மை வ ளத் ைத யும் காட்டுகின்றன. அங்கே உள்ளவர்கள் வயல்களில் உள்ள மீன்களைக் கண்டு இன்புறுகிருர்களேயன்றி உண்டு துன் புறுத்த மாட்டார்கள். ஆதலின் வயல்களில் சேல்கள் நிரம்பியிருக்கின்றன. அகத்து நீர்மையும் புறத்து நீரும் பொருந்திய அந்த ஊரில் மலையின் மேலே செங்கோட்டு வேலன் எழுந்தருளியிருக்கிருன். எங்கோ இருக்கிறவன் நமக்கு அருள் செய்வதற்கு. நிாம் 4τωπε கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/57&oldid=539435" இருந்து மீள்விக்கப்பட்டது