பக்கம்:இரு விலங்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சால நன்று

43


வாழ்த்துதல்

  "நாலாயிரம் கண் இருந்தால் ஒருவாறு திருச்செங் கோட்டுப் பெருமானுடைய பேரழகைக் கண்டு இன்புற் றிருக்கலாமே. எனக்கு இருப்பவை இரண்டு கண்கள் தாமே?" என்று இரங்கினார் அருணகிரியார். ஆயினும் நன்றாகத் தரிசித்து இன்புற்றார். நாமோ அவனைச் சென்று பார்க்கவில்லை. எல்லாருக்கும் அடிக்கடி சென்று பார்க்க இயலாது. கோயிலுக்குச் சென்று பார்க்க முயற் சியும் வாய்ப்பும் இல்லாதவர்களுக்கு எளிதாக ஒரு காரியம் இருக்கிறது. அவனை வாழ்த்தலாம். திருச்செங்கோட்டி லுள்ள ஆண்டவனைத் தரிசித்த அருணகிரியார், யாவர்க் கும் எளியதாக, ஆனால் அரிய பயனை உடையதாக ஒர் உபாயத்தைச் சொல்கிறார். அவர் பாடிய பாடலைக்கேட்டு விட்டு, 'நாலாயிரங் கண் இல்லையே என்று இப்பெருமான் இரங்குகிறாரே! அத்தகைய மூர்த்தியை நாம் பார்க்க வேண்டும். பார்க்க வாய்ப்பு இல்லையே!' என்று எண்ணி ஏங்குவாருக்கு ஆறுதலாக, "அவனை வாழ்த்திக் கொண் டிருக்கலாம். அது மிகவும் நல்லது" என்று அடுத்த பாட்டில் சொல்கிறார்.

செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே.

கருமால் மருகன்

 செங்கோடனை மீட்டும் நினைக்கும்போது சென்ற பாட்டில் முதலில் சொன்னதுபோலத் திருமால் மருகன் என்று மறுபடியும் நினைவு கொள்கிறார். அங்கே 'மாலோன் மருகனை' என்று எடுத்தார். இங்கே,

கருமால் மருகனை

என்று தொடங்குகிறார். திருமால் கரிய நிறம் உடையவர். அவருக்கு மருகன் முருகப்பெருமான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/65&oldid=1402666" இலிருந்து மீள்விக்கப்பட்டது