பக்கம்:இரு விலங்கு.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 இரு விலங்கு

'தள்ளாப் பொருள்.இயல்பில் தண்டமிழாய் வந்திலார்

கொள்ளார்.இக் குன்று பயன்'

என்று கூறிப் பின்பு வள்ளி நாயகி களவுக் காதலால் சிறப்புப் பெற்றதைப் பாடுகிரு.ர். இனி அக் களவிற் புணர்ச்சியை உடைமையான் வள்ளி சிறந்தவாறும், அத் தமிழை ஆய்ந்தமையான் முருகன் சிறந்தவாறும் கூறு கின்ருர் என்று பரிமேலழகர் இங்கே எழுதுகிரு.ர்.

இந்தச் சிறப்பான களவு மணத்தால் வள்ளி நாயகியை மணந்தமையால் இங்கே அருணகிரி நாதர்,

செம்மான் மகளைக் களவுகொண்டு வரும்ஆகுலவனே

என்ருர். -

நல்ல களவு

களவு செய்தல் பொதுவாகத் த வ று க | ன். ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று அது. ஆயினும் பிறர் பொருளே அவர் அறியாமல் கைக்கொள்ளும் களவுக்கும் இந்தக்களவுக்கும் வேறுபாடு உண்டு. களவில் நல்ல களவும் உண்டு. ஒருத்தி தன் கணவனேடு கோபித்துக் கொண்டு உயிரை விட்டுவிடத் துணிந்தாள். அதற்காக நஞ்சை வாங்கிப் பின்பு உண்போமென்று ஓரிடத்தில் மறைவாக வைத்திருந்தாள். அதனே அறிந்த அவள் தோழி அவள் அறியாமல் அதைக் களவில் எடுத்துச் சென்று கொட்டி விட்டாள். அவள் செய்தது களவுதான். ஆனல் அதல்ை நன்மைதான் விளைந்தது. நஞ்சுண்டு சக எண்ணியிருந்த பெண்மணி அை வி

I. இப்புணர்ச்சியை வேண்டுகின்ற பொருள் இலக் கணத்தையுடைய தமிழை ஆராயாத தலைவர் களவொழுக் கத்தைக் கொள்ள மாட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/72&oldid=539450" இருந்து மீள்விக்கப்பட்டது