பக்கம்:இரு விலங்கு.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 இரு விலங்கு

வானம் உய்யப் பொருமாவினச் செற்ற போர் வேலளை,

செங்கோட்டு வளம்

... " இத்தகைய முருகன் திருச்செங்கோட்டில் எழுந்

தருளியிருக்கிருன், நீர்வளமும், நிலவளமும் பொருந்தியது.

திருச்செங்கோடு. அருணகிரியார்காலத்தில் அது அப்படி இருந்ததுபோலும்! . .

மரங்களில் அடிக்கடி நீர் வேண்டியிருப்பது கமுக மரம். பன மரத்திற்குச் சிறியதாக இருக்கும்போது தண்ணீர் விட்டால் போதும். வளர்ந்த பிறகு விட வேண்டாம். தென்ன மரத்திற்குச் சிறிதாக இருக்கும் போது நன்ருகத் தண்ணிர் விட்டு வளர்க்கவேண்டும். வளர்ந்த பிறகு அவ்வப்போது தண்ணிர் விடவேண்டும். கமுக மரத்திற்கு எப்போதும் தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கை காய்த்தால் கமுகு காய்க்கும்' என்பது ஒரு பழமொழி. தண்ணிர் விட்டு விட்டுக் கை காப்ப்புப்பெறவேண்டுமாம். அடிக்கடி மழை பெய்யும் இடத்தில்தான் கமுக மரம் வளர்ந்துவரும், இன்னும் காய்க்காத பல கமுக மரங்கள் திருச்செங் கோட்டில் நிறைய வளர்ந்திருக்கின்றன. அதுமாத்திரம் அன்று. பல படிமங்களேத் தரும் மாமரங்களும் வளர்ந் திருக்கின்றன. முருகப்பெருமான் இருக்கும் இடத்தில், மாமரங்கள் வளர்வதற்கு ஒரு பொருத்தம் உண்டு. அப் பெருமான் ஒரு மாம்பழத்தைப் பெறவேண்டுமென்று எண்ணி உலகத்தை வலம் வந்தான். அது கிடைக்காமை, யில்ை பழனி மலே ஏறி நின்று தவக்கோலத்துடன் விளங்குகிருன். அத்தகைய முருகப்பெருமானுக்கு எப் பொழுதுமே நிவேதனம் பண்ணும்படி கனிகளைத் தருகிற மாமரங்கள் திருச்செங்கோட்டில் இருக்கின்றனவாம். நீர் வளத்தை நன்கு தெரிவிக்கும் சிறந்த கமுக மரங் களும், முருகப்பெருமானுக்கு உகந்த பழங்களைத் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/76&oldid=539454" இருந்து மீள்விக்கப்பட்டது