பக்கம்:இரு விலங்கு.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 - இரு விலங்கு

நமக்குக் கிடைப்பது போல, சமுதாயத்தில் Qమిష320 பிரிவுகள் ஒற்றுமையோடு வாழ்கின்ற வாழ்வு இருந்தமை யில்ை நல்ல காரியங்களைச் செய்ய முடிந்தது. இப்போது ஒர் உறுப்புக்கும், மற்ருேர் உறுப்புக்கும் சண்டை வந் ததுபோலச் சாதிக்குச் சாதி பகை தோன்றினமையின் சாதியே வேண்டாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மேல் சாதி, கீழ்ச்சாதி என்ற வேறுபாடு வந்ததே இதற்கு

முக்கியமான காரணம். -

பழங்காலத்தில் நான் இன்னவகுப்பு என்று எண்ணு வதில் எல்லோரும் பெருமை கொண்டிருந்தார்கள், ஒவ்வொரு வகுப்பினரும் தம் வகுப்புக்கு மூலமாக ஏதாவது ஒரு கடவுளைச் சொல்லிக்கொண்டிருந்தார் கள். பழங்காலத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் தனிச் சங்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனியே ஒரு பெயர் உண்டு. கைக்கோளர்கள் என்னும் சாதியினர் முருகப்பெருமானுடைய தம்பியாகிய வீரவாகுவின் குலத் தவர் என்று சொல்லிக் கொள்வார்கள். தோல் தைப்ப வர்கள் தங்களே அருந்ததியின் குலத்தவர்கள் என்று சொல் விக் கொள்வார்கள். உலோக வேலே செய் கிறவர்கள் விசுவகர்மாவினுடைய பரம்பரை என்று சொல்லிக் கொள்வார்கள். இப்படி எல்லாச் சாதிகளுக் கும் இறைவனுேடு தொடர்புடைய வரலாறுகள் உண்டு. சமுதாயத்திலுள்ள சாதிகள் எல்லாம் இறைவளுேடு தொடர்புடையன என்ற எ ண் ண மு. ம், அதனல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பெருமிதமும், எல்லோரும் சேர்ந்து சமுதாயத்தை வளர்க்க வேண்டு மென்ற ஒற்றுமை நோக்கும் இருந்தன. . .

அந்தக் காலத்தில் தோன்றினவர் அருணகிரியார். சாதிப் பெயர்களேத் தொனிக்கும்படி வைத்து இந்தப் பாட்டைப் பாடினர். கொல்லணுகிய கருமானையும், தோல் தைக்கும் தொழிலாளியாகிய செம்மானையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/80&oldid=539458" இருந்து மீள்விக்கப்பட்டது