பக்கம்:இரு விலங்கு.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தண்டையம் புண்டரீகம் o

அது நடக்கும் தாமரையாக இருக்கிறது. தாமரை நடக்காதே! ஒரிடத்தில் நிலையாகத்தானே இருக்கும்? இதுவோ நடக்கிற தாமரை. ஆண்டவன் தண்டை அணிந்த திருவடி உடையவன். தண்டை என்ற அணி தன்னை யணிந்த திருவடியின் இளமையைக் காட்டுகிறது. முருகன் இளம் குழந்தை பார்க்கப்பார்க்க இன்பம் தரும் தளர் நடையிட்டு வரும் அழகான திருவடி அவன் திருவடி மெத்தென்ற தளர்நடையிட்டுப் பக்தர்களுடைய உள்ளத்தில் உலாவரும் சீறடி அதை நோக்கும் போது கண்ணுக்குத் தாமரை போல எழில் தருவதோடு, அதில் உள்ள தண்டை காதுக்கு இனிய ஒலியைத் தரும்:

'திருவடியும் தண்டையும் சிலம்பும்' என்று வேறு ஒரிடத்தில் சொல்கிரு.ர்.

தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண்கழல் சிலம்புடன் கொஞ்சவேநின்' . என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுவார். -

காணுகின்ற அன்பர்களுக்கு முருகனுடைய திருவடி தாமரை மலராகத் தெரியும், கண்டு அண்டுகின்ற வர்களுக்கு தாமரையாகக் கண்ணுக்குக் காட்சி தருவ தோடு அதன் தண்டை ஒலியும் கேட்கும். சேரமான் பெருமாள் நாயனர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சுந்தரமூர்த்தி நாயனருடைய நண்பர். அவர் நாள்தோறும் நடராசப்பெருமானப் பூசிப்பது வழக்கம். அவர் இருந்த இடம் வஞ்சிமாநகரம். ஒவ்வொரு நாளும் பூசை முடிந்த தருணத்தில் நடராசப் பெருமானின் சிலம் பொலி கேட்குமாம். அப்படிக் கேட்டால் ஆண்டவன் தம் பூசையை ஏற்றுக் கொண்டான் என்று அவர் மன நிறைவு பெறுவார். ஒரு நாள் பூசை செய்யும் போது அந்த ஒலி கேட்கவில்லை. சற்றே தாமதமாகக் கேட்டது. அவர் அப்போது, "நாம் ஏதோ தவறு இழைத்துவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/95&oldid=539473" இருந்து மீள்விக்கப்பட்டது