பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
இறுமாப்புள்ள இளவரசி
 

நீக்கியுள்ளேன் ! உனக்குச் சம்பளம் இதுதான்!" என்று கூறிக்கொண்டே ஒரு காலால் தானியேலின் முதுகில் பலமாக உதைத்தான். அதனால் தானியேல் நிலை தடுமாறி விட்டத்திலிருந்து கீழே உணவு மேசைமீது தலைகுப்புற விழுந்தான். இந்த நிகழ்ச்சி அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது என்றால், அங்கே கூடியிருந்தவர்கள் எவ்வளவு ஆச்சரியப்பட்டி ருப்பார்கள்!

கீழே விழுந்த தானியேல், நடந்த கதை முழுவதையும் கட்டத்திலிருந்த அனைவருக்கும் தெரிவித்தான். அதைக் கேட்ட பாதிரியார், கையிலிருந்த கத்தியையும் முள்ளையும் போட்டுவிட்டுத் திருமணச் சடங்கைத் தொடங்கி வைத்து வேகமாக முடித்துவிட்டார். பிறகு, நடனங்கள் நடந்தன. தானியேலும் சிறிது நேரம் ஆடினான். ஆனால், நடனத்தைக்காட்டிலும் அவன் விரும்பியது மதுவைத்தான். ஆதலால், அவன் ஆவலோடு மதுவருந்தத் தொடங்கி, அதிலேயே மூழ்கிவிட்டான்.