பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
178 இறையனார் அகப்பொருள் (கற்பு வேனிற் பருவங் குறித்துப் பிரிந்த தலைமகன் பிரிய வேறு பட்டாள் தலைமகள்; வேறுபட, ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் சொல்லியதற்குச் செய்யுள் : | தலைமகள் தோழிக்குரைத்தல் 'மெல்லிய லாய்நங்கண் மேல்வெய்ய வாய்விழி ஞத்து வென்ற மல்லியல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையோன் வில்லியல் காமனைச் சுட்டசெந் தீச்சுடர் விண்டவன்மேற் செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தேமலரே.' (உ அசு) எங்ஙனம் ஆற்றுவல் என்பதுபடச் சொல்லினாளோ எனின், 'இவ்வேனில் வரவின்கண் நம்மேல் இவ்வகை வெய்ய வாகி விரியாநின்ற பிண்டியலர் அவர்க்கும் இவ்வகை வெம்மை யைச் செய்யுமன்றே, செய்தவிடத்துத் தாம் எடுத்துக்கொண்ட பொருள் முடியாது மீள்வர் கொல்லோ என ஆற்றேனாகின் றேன்' என்றாள் என்பது. இச்சூத்திரம் தவளைப் பாய்ச்சல். வேந்தர்க் குற்றுழி.' (இறையனார் - ஙக) என்னுஞ் சூத்திரத்துடன் நோக்குடைத்து என்பது. சூத்திரம் - சஉ பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே. என்பது என்னுதலிற்றோ எனின், பரத்தையிற் பிரிவு நாடிடை யிட்டு நீங்கி உறைதல் இல்லை என்பது உணர்த்துதல் நுதலிற்று. மேற் சூத்திரத்துள் எய்தியது விலக்கியவாறு. இதன் பொருள் : பரத்தையிற் பிரிவே என்பது - பரத் தையர்மாட்டுப் பிரியும் பிரிவு என்றவாறு; நிலத்திரிபு இன்றே என்பது - இடத்திரிபு இன்று என்றவாறு. என்பது இடத்தின் நீங்கி இயையப் பெறார் என்றவாறு. பரத்தையிற் பிரியுங் காலத்து நாடிடையிட்டும் காடிடை யிட்டும் பிரியப்படாது என்றவாறு. எனவே, ஒரூரது என்பதூஉம், ஓரிடத்தது என்பதூஉம் உணர்த்தப்பட்டதாம்.