பக்கம்:இறைவர் திருமகன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இனிமையான ஒளி வான் பரப்பிலே தோன்றியதையும், தேவ தூதர்களின் புகழ்ப் பாட்டின் இசை காற்றிலே பரவியதையும் அறியாமல் மக்கள் துயின்று கொண்டிருந்தனர். ஆனால் பெத்தலெம் நகருக்கு வெளியேயிருந்த குன்றுகள் நிறைந்த பகுதியிலே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் இச்செய்தியை அறிந்தார்கள்.

குளிர் காய்வதற்காக வளர்த்திருந்த நெருப்பைச் சுற்றி, தம் போர்வைகளை இழுத்து மூடிக் கொண்டு பாதி தூங்கியும் பாதி தூங்காமலும் தங்கள் ஆட்டுக் கிடைகளோடு தரையில் படுத்துக் கிடந்த அவர்கள் வானில் தோன்றிய அதியற்புதமான பேரொளியைக் கண்டு வியந்து தலை தூக்கிப் பார்த்தனர்.

அந்தப் பேரொளியின் இடையிலே ஒரு தேவதூதன் தோன்றினான். அவனைக் கண்டு அஞ்சி எழுந்த ஆட்டிடையர்கள் வணங்கித் தொழுதார்கள்.

“அஞ்சாதீர்கள்! எல்லா மக்களுக்கும் இன்பந்தரும் ஒரு செய்தியையே நான் இப்போது உங்களுக்கு சொல்லப் போகிறேன்.