உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இறைவர் திருமகன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அவர்கள் தேடிவந்த அரசன், அந்த எளிய சிறு வீட்டில் இருந்த அக் குழந்தைதான்.

அந்தச் சிறு குழந்தையின் முன்னே மூன்று பெரிய மனிதர்களும் மண்டியிட்டுத் தொழுதார்கள். ஒரு கிழவர் தம்மிடமிருந்த பொன் முடியொன்றை வருங்கால அரசனுக்கு உகந்த காணிக்கையாகக் கொடுத்தார். இரண்டாமவர் ஒரு கூடை நறும் புகைத் தூளைத் தம் காணிக்கையாகக் செலுத்தினர். மூன்றாமவர் விலையுயர்ந்த கந்தரசம் அடங்கிய ஒரு ஜாடியை அளித்தார்.

புனிதக் குழந்தையைத் தொழுது எழுந்த பின் அந்த மூன்று அறிஞர்களும் அங்கிருந்து அகன்றனர்.

மேரி, வியப்புடன் தன் அருமைக் குழந்யைப் பார்த்துக் கொண்டே நெடு நேரம் நின்றாள். அவளுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. பிள்ளை பிறந்த அன்று தொழுவத்தின் கதவோரத்தே சென்ற ஆட்டிடையர்களையும், பின்னர், ஆலயத்துக்குச் சென்ற பொழுது பிள்ளையைக் கையில் வாங்கிக் கொண்டு விண்ணை நோக்கி இறைவனுக்கு நன்றி கூறிய